ஈஸ்வரன் படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிம்பு. அதைத்தொடர்ந்து சில்லுனு ஒரு காதல் இயக்குநர் கிருஷ்ணாவுடன் ‘பத்து தல’ படத்தில் பணியாற்றவிருக்கும் அவர் மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது, சரியாக ஒத்துழைப்பதில்லை என்ற தன் மீதான விமர்சனங்களுக்கெல்லாம அவரது அடுத்தடுத்த பட அறிவிப்புகள் பதிலாய் அமைந்துள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் சோஷியல் மீடியாவில் தன்னை இணைத்துக் கொண்ட நடிகர் சிம்பு அவ்வப்போது புதிய புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுகிறார். அந்த வகையில் தனது நண்பரும் நடிகருமான மகத்தின் செல்ல நாயுடன் சிம்பு பேசும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
அதில் அவர் பேசியதாவது, ஹேய் குக்கூ நீ பொண்ணு. இப்பதான் வளர்ந்து வந்திருக்க. இப்ப நீ ஒரு பையன சந்திக்கனும். அந்த பையனோட உனக்கு சில விஷயங்கள் நடக்கணும். அதுக்கு முதலில் எனக்கு கல்யாணம் நடக்கணும். நான் மட்டும் தனியா இருக்கேன்.
நீ மட்டும் ஜாலியா இருக்கனா அது நியாயம் இல்ல. புரிஞ்சதா பப்பு. என் கஷ்டம் உனக்கு புரியுதா இல்லையா. ஏதாவது பேசு மேன். ஓ நீ பொண்ணுல்ல. எனக்கு அந்த கடவுள் கொடுப்பாரு. வரும்போது வரட்டும். நீ சந்தோஷமா இரு. ஏதாவது சொல்லேன். கல்யாணம் ஆயிடும்ணு சொல்லுறியா.” என்று பேசுகிறார் சிம்பு.
சேரில் அமர்ந்தபடி சிம்பு பேசுவதை க்யூட்டாக கேட்டுக் கொண்டிருக்கிறது மகத்தின் செல்ல நாய். இந்த வீடியோ தற்போது வரை 7 லட்சத்துக்கும் அதிகமான பாரவைகளைப் பெற்றுள்ளன.