• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இந்தியன் 2 விபத்து எதிரொலி: சிம்புவின் மாநாடு படத் தயாரிப்பாளர் செய்த புதுமுயற்சி- குவியும் பாராட்டு

இந்தியன் 2 விபத்து எதிரொலி: சிம்புவின் மாநாடு படத் தயாரிப்பாளர் செய்த புதுமுயற்சி- குவியும் பாராட்டு

குத்துவிளக்கேற்றும் மாநாடு பட தயாரிப்பாளர்

குத்துவிளக்கேற்றும் மாநாடு பட தயாரிப்பாளர்

  • Share this:
    மாநாடு படத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரூ.30 கோடிக்கு காப்பீடு செய்துள்ளார்.

    கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் வரை காயமடைந்தனர். இச்சம்பவம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த கோர விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன், லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர், தயாரிப்பு மேலாளர் உள்ளிட்ட 4 பேரின் மீது விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்துதல், கவனக் குறைவாக இருந்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

    இச்சம்பவத்தை அடுத்து திரைத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்றும் குரல்கள் எழுந்தன.

    இதுகுறித்து லைகா நிறுவனத்துக்கு கடிதம் எழுதியிருக்கும் கமல்ஹாசன், “படப்பிடிப்பில் கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். விபத்து ஏற்பட்டால் தயாரிப்பு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும். விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு முழுமையாக, உடனடியாக தரப்பட வேண்டும்.” என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் சிம்புவின் மாநாடு படத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.30 கோடி மதிப்புக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இன்சூரன்ஸ் செய்துள்ளார். அதற்கான பிரீமியம் தொகை ரூ.7.8 லட்சம் ரூபாயை ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து அவர் செலுத்தியிருக்கிறார். சுரேஷ் காமாட்சியின் இச்செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    மேலும் படிக்க: பல வருடங்களுக்குப் பின் சர்ச்சையாகும் புன்னகை மன்னன் முத்தக்காட்சி!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: