ஈஸ்வரன் ரிலீஸாக இன்னும் எட்டே நாள் தான்... வீடியோவை வெளியிட்ட சிம்பு

நடிகர் சிம்பு

ஈஸ்வரன் திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் எட்டு நாட்களே தான் உள்ளது என்பதை குறிப்பிட்டு சிம்பு வீடியோ வெளியிட்டுள்ளார். simbu released a video about eeswaran movie in instagram

 • Share this:
  இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.சமீபத்தில் ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதையடுத்து ஈஸ்வரன் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  கொரோனா லாக்டவுன் தளர்த்தப்பட்ட காலத்தில் ஈஸ்வரன் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 28 நாட்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடைப்பெற்றது. அதையடுத்து உடனே படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் முடிக்கப்பட்டது. இந்நிலையில் மாஸ்டர் படம் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் நிலையில், ஜனவரி 14 ஆம் தேதி ஈஸ்வரன் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது சிம்பு மற்றும் விஜய் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

  இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.படத்தின் ட்ரெய்லரை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்து கொண்டிருக்கும் நிலையில்,படம் வெளியாக இன்னும் 8 நாட்களே உள்ளது என்பதை குறிப்பிட்டு சிம்பு வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதில் மாங்கல்யம்,ஈஸ்வரன் பொங்கல் என்று இரண்டு ஹேஸ்டேக்களை பயன்படுத்தியுள்ளார்.

     சிம்பு உடல் எடையை குறைத்த பின்பு நடித்த முதல் படம் ஈஸ்வரன் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
  Published by:Tamilmalar Natarajan
  First published: