Home » News » Entertainment » SIMBU PATHU THALA MOVIE FIRST LOOK RELEASED BY AR RAHMAN TMN

சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்

சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் ‘பத்து தல’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்
  • Share this:
நடிகர் சிம்பு நடிப்பில் பொங்கலை முன்னிட்டு ‘ஈஸ்வரன்’ திரைப்படம் ஜனவரி 14 ஆம் தேதி வெளியானது. விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்துடன் போட்டிபோட்டாலும் ஈஸ்வரன் திரைப்படமும் நல்ல வசூலை ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்த லாக்டவுன் காலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சிம்பு உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக உருவெடுத்தார்.மேலும் லாக்டவுன் தளர்த்தப்பட்ட காலத்தில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 28 நாட்கள் நடைப்பெற்றது.இதனை தொடர்ந்து சிம்பு ஒபிலி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ளார்.மேலும் கதாநாயகியாக நடிகை ப்ரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார்.மேலும் இந்த படத்திற்கு  கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


 


பத்து தல படத்தை ஸ்டியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.சிம்பு தற்போது மாநாடு படத்தில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: January 18, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories