விஜய் உடன் மோதும் சிம்பு... ஈஸ்வரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் உடன் மோதும் சிம்பு... ஈஸ்வரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சிம்பு

சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் திரைப்படம் ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 • Share this:
  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியாகும் ஒவ்வொரு ஒவ்வொரு நாளும் தீபாவளி போல் தான் இருக்கும்.அதில் ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு, சூர்யா,தனுஷ் ஆகிய நடிகர்களின் படம் வெளியானால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு திரையரங்குகளில் கூட்டம் அலைமோதும். ஆனால் இந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்றால் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டது.பின்னர் கொரோனா தொற்று குறைய தொடங்கியதும் 6 மாதங்களுக்கு பிறகு 50 சதவீத இருக்கை அனுமதியுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

  இந்நிலையில் நடிகர் விஜய்,முதலமைச்சரை சந்தித்து திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியானது.இதையடுத்து மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது.இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரைப்பிரபலங்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  இந்நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

     ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு காலத்தில் 28 நாட்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது.இந்த திரைப்படம் சிம்பு உடல் எடை குறித்த பின்னர் வெளியாகும் முதல் திரைப்படமாக திரைக்கு வர உள்ளதால் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு நாள் இடைவெளியில் ஈஸ்வரன் திரைப்படம் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Tamilmalar Natarajan
  First published: