`என் பிறந்தநாளில் சிறு மகிழ்ச்சியாக..' - ரசிகர்களுக்கு சிம்புவின் இன்ப அறிவிப்பு!

நடிகர் சிம்பு

பொங்கலுக்கு மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, படத்தின் டீசர் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  நடிகர் சிம்பு நடித்திருக்கும் ‘மாநாடு’ படத்தின் டீசர் அவர் பிறந்தநாள் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

  அரசியல் களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பொங்கலுக்கு மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, படத்தின் டீசர் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா காலகட்டத்தில் வெகு விரைவாக முடிக்கப்பட்ட ‘ஈஸ்வரன்’ படத்திற்கு பெரிய வரவேற்பைக் கொடுத்தீர்கள். வெற்றி பெறச் செய்தீர்கள்.

  உங்கள் அன்பிற்கு நிறைய நன்றி கடன்பட்டுள்ளேன். எனது பிறந்தநாளன்று நான் உங்களோடு இருக்க வேண்டும். ஆனால் சில முன் தீர்மானங்களால் ஊரில் இல்லை. வெளியூர் செல்கிறேன். எனது குடும்பத்தினர் வந்து வீட்டு முன் காத்திருப்பதை நான் விரும்பவில்லை. அதனால் நண்பர்கள் யாரும்என் பிறந்தநாளன்று சந்திக்க வந்து ஏமாற்றமடைய வேண்டாம். உங்களை நேரடியாக சந்திக்கும் நிகழ்வை விரைவில் ஒருங்கிணைப்பேன்.

  ஒரு சிறு மகிழ்ச்சியாக என் பிறந்தநாளன்று ’மாநாடு’ டீசர் வெளியாகும். மகிழுங்கள். நிச்சயம் இனி நமது ஆண்டாக வெற்றிகரமான ஆண்டாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: