மீண்டும் மாநாடு ஷூட்டிங்... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

மீண்டும் மாநாடு ஷூட்டிங்... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

மாநாடு ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்

மாநாடு பட ஷூட்டிங் குறித்த தகவலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பகிர்ந்துள்ளார்.

  • Share this:
    இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, நடிகர் கருணாகரன், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.

    அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்து வருவதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் தொடங்க இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இத்தகவலை அறிந்து சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.



    இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் கிராமத்து பின்னணியைக் கொண்ட கதையில் நடிக்க சிம்பு சம்மதம் தெரிவித்துள்ளார். பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது.

    மேலும் படிக்க: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவெடுத்தது ஏன்? - அனிதா சம்பத் விளக்கம்

    பாரதிராஜா நடிக்கும் காட்சிகளை படமாக்கி வரும் படக்குழுவினர் குறுகிய காலத்தில் படப்பிடிப்பு முழுவதையும் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க உள்ளதாகவும், அக்டோபர் 8-ம் தேதி முதல் சிம்பு இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    Published by:Sheik Hanifah
    First published: