Home /News /entertainment /

சிம்புவைப் பற்றிய தவறான கடந்த கால அபிப்ராயங்களை நீக்கிவிடுங்கள் - மாநாடு தயாரிப்பாளர்

சிம்புவைப் பற்றிய தவறான கடந்த கால அபிப்ராயங்களை நீக்கிவிடுங்கள் - மாநாடு தயாரிப்பாளர்

சிம்பு உடன் சுரேஷ் காமாட்சி

சிம்பு உடன் சுரேஷ் காமாட்சி

  • News18
  • 2 minute read
  • Last Updated :
பார்ட்டி படத்தை அடுத்து சிம்புவுடன் மாநாடு படத்துக்காக கைகோர்த்தார் வெங்கட் பிரபு. மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் பல மாதங்களாக சினிமா படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. காலமும் நேரமும் கடந்துகொண்டே போவதால் படத்தைக் கைவிடுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிரடியாக அறிவித்தார்.

இதனை அடுத்து, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் பிறந்தநாள் அன்று போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த நடிகர் சிம்பு, மாநாடு படத்தில் மீண்டும் இணைய சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது. அதேபோல, படத்தின் அறிவிப்பும் வெளியானது.

படத்தில் பணியாற்றும் பிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிக்கப்பட்டனர். படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், படப்பிடிப்பில் சிம்பு ஒத்துழைக்க மறுப்பதாக சில செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், ”பெரிய படங்கள் செய்வது சாதாரணமல்ல. ஒருங்கிணைப்பு வேலைகள் அதிகம் இருக்கும். இதில் ஒரு சில சக நண்பர்களின் பொறாமைப் பார்வையும் இருக்கும். அப்படியான யாரோ ஒரு நபர், மாநாடு படத்தின் மீது வெறுப்பை உமிழ பத்திரிகைகளில் அவருக்கு இருக்கும் பலத்தைப் பயன்படுத்தி அவதூறு பரப்பி வருகிறார்.

ஒரு பத்திரிகையில் சிம்பு படப்பிடிப்பிற்கு 16-வது நாளிலிருந்து தாமதமாக வருகிறார் என்ற செய்தியை வெளியிடுகிறது.  என்ன ஒரு அபத்தம். அந்த செய்தி வெளியான அன்று படப்பிடிப்பே ஆறு நாட்கள்தான் நடந்து முடிந்திருந்தது.

ஒருநாள் கூட சிம்பு தாமதமாக வரவில்லை. ஷுட்டிங் வராமல் தவிர்க்கவும் இல்லை. காட்சி படமாக்கி முடியும் வரை கேரவனுக்கும் செல்வதில்லை. அங்கேயே குடையைப் பிடித்து நின்றுகொண்டு நடித்துக் கொடுக்கிறார். அப்படியிருக்கும்போது ரெண்டு கேரவன் கேட்கிறார் எனவும் செய்தி வெளியிடுகிறார்கள்.

இன்னொரு பத்திரிகை சிம்பு ஹைதராபாத்துக்கு வர மறுத்துவிட்டார் என்று ஒரு செய்தி போடுகிறார்கள்.
இதெல்லாம் சின்ன செய்திதானே? கடந்து போங்கள் என சொல்லலாம். நாங்கள் சொந்தக் காசை வைத்து படம் பண்ணலை. வட்டிக்கு வாங்கி பண்றோம்.
ஒவ்வொரு தவறான செய்தியும் பணம் தருபவர்களைப் பதற்றத்திற்குள்ளாக்கும்.

வேக வேகமான இயக்குநர் & டீம்,  காட்சிகளைப் புரிந்து நேரமெடுக்காமல் நேர்த்தியாக நடிக்கும் நடிகர்கள் என அருமையாக வடிவமைக்கப்பட்ட ஒரு குழு திறம்பட இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

உங்களின் மனதில் இன்னும் சேமிக்கப்பட்டிருக்கும் தவறான கடந்த கால அபிப்ராயங்களாக சிம்பு பற்றியவை இன்னும் இருந்தால் CTRL + ALT + DELETE பட்டனை அமுக்குங்கள். அவரை தன்னியல்பான நடிகராக இயங்க விடுங்கள். தன் ரசிகர்களுக்காக உடல் எடையைக் குறைத்து தன்னை மாற்றிக் கொண்டு சினிமாவை நேசித்துச் செய்யும் மனிதனாக எங்களது படப்பிடிப்பு தளத்திற்கு வந்து செல்பவரைப் பற்றி இனியும் தவறான செய்திகள் வேண்டாம் நண்பர்களே.

யாரையோ திருப்திபடுத்த முறையற்ற செய்திகள் வெளியிட வேண்டாம் என அன்போடு என் நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.  எதுவாக இருந்தாலும் எனக்கு அழையுங்கள். சரியானத் தகவல் தருகிறேன். அல்லது என் பத்திரிகை தொடர்பாளரிடம் கேளுங்கள்.

உங்களால் உயர்த்திவிடப்பட்ட ஒரு தயாரிப்பாளராகவே வலம் வர ஆசைப்படுகிறேன். கைகொடுத்து நில்லுங்கள்.
நன்றியோடு எப்போதும் இருப்பேன்" என்று சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Sankar
First published:

Tags: Manadu, Simbu

அடுத்த செய்தி