Home » News » Entertainment » SIMBU MAANAADU OFFICIAL MOTION POSTER RELEASED MSB

சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர் ரிலீஸ்

சிம்பு நடிப்பில் உருவாகும் ‘மாநாடு’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

  • Share this:
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

சென்னை, ஹைதராபாத், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் ‘மாநாடு’ படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன. இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு ‘மாநாடு’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கையில் துப்பாக்கியுடன் அரசியல் மாநாட்டுக்குள் சிம்பு இருக்க, வெடிகுண்டு வெடிக்கிறது. யுவன் சங்கர்ராஜாவின் இசையுடன் வெளியிடப்பட்டுள்ள மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க: Eeswaran Movie Review : சிம்புவின் ‘ஈஸ்வரன்’ எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்


‘மாநாடு’ படப்பிடிப்புக்கு இடையே சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியானது. கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமான ஈஸ்வரன் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
First published: January 14, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading