ஒரு பக்கம் ’ஈஸ்வரன்’, மறு பக்கம் ’மாநாடு’ - மகிழ்ச்சியில் சிம்பு ரசிகர்கள்!

ஒரு பக்கம் ’ஈஸ்வரன்’, மறு பக்கம் ’மாநாடு’ - மகிழ்ச்சியில் சிம்பு ரசிகர்கள்!

நடிகர் சிம்பு

இந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் கடந்தாண்டு வெளியாகி வைரலாகின.

 • Share this:
  பொங்கல் தினத்தன்று மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஜனவரி 14 ஆம் தேதி திரைக்கு வரும் ’ஈஸ்வரன்’ வெளியீட்டிற்காக காத்திருக்கிறார் நடிகர் சிம்பு. இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில் அவரது ரசிகர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் உள்ளது.

  இயக்குனர் வெங்கட் பிரபுவின் அரசியல் பொழுதுபோக்கு படமான ’மாநாடு’ படத்தின் மோஷன் போஸ்டர் ஜனவரி 14 ஆம் தேதி மாலை 4:05 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் கடந்தாண்டு வெளியாகி வைரலாகின. இது சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை இன்னும் அதிகரித்துள்ளது.  சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மாநாடு படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், மனோஜ், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: