CINEMA SIMBU LAUNCH HIS OWN YOUTUBE CHANNEL AND OPEN SOCIAL MEDIA ACCOUNT MSB
யூடியூப், ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் சிம்பு என்ட்ரி - ரசிகர்கள் கொண்டாட்டம்
நடிகர் சிம்பு
தனது பெயரில் யூடியூப் சேனல் தொடங்க உள்ளதாகவும், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் இணைய உள்ளதாகவும் நடிகர் சிம்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நடிகர் சிம்புவுக்கு ரசிகர்கள் ஏராளம். அவரது படம் குறித்த அறிவிப்புகள், புதிய புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை சமூகவலைதளத்தில் ட்ரெண்டாக்கி கொண்டாடும் ரசிகர்களுக்கு தற்போது குட் நியூஸ் சொல்லி இருக்கிறார் சிம்பு.
அக்டோபர் 22-ம் தேதி தனது யூடியூப் சேனல் மற்றும் அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியா கணக்குகளை சிம்பு தொடங்க இருப்பது தான் அந்த நற்செய்தி. இதை அறிந்த ரசிகர்கள் சமூகவலைதளத்தில் #SilambarasanTR என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வெங்கட் பிரபு - சிம்பு கூட்டணியில் உருவாகும் ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்திலிருந்து துவங்குகிறது. இதனிடையே சுசீந்திரன் இயக்கத்தில் கிராமத்து பின்னணி கொண்ட கதையில் நடித்து வரும் சிம்பு அதற்காக தனது உடல் எடையைக் குறைத்து லுக்கை மாற்றியுள்ளார். அவரது புதிய தோற்றத்தைப் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் புகைப்படங்கள் எதுவும் வெளியில் கசிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது படக்குழு.
#STR To Arrive On Social Media On 22nd October 🔥🎉😎🎊
சுசீந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் சிம்புவுடன் நிதி அகர்வால், பாரதிராஜா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். திரு ஒளிப்பதிவாளராகவும், எஸ்.எஸ்.தமன் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தமாகியுள்ளனர்.
திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டிருக்கும் படக்குழு 2021-ம் படத்தைத் திரைக்கு கொண்டுவரவும் முடிவு செய்துள்ளனர்.