முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிம்புவின் ‘ஈஸ்வரன்' ட்ரெய்லர் எப்போது ரிலீஸ்? உறுதியான தகவல்

சிம்புவின் ‘ஈஸ்வரன்' ட்ரெய்லர் எப்போது ரிலீஸ்? உறுதியான தகவல்

ஈஸ்வரன் பட ஸ்டில்

ஈஸ்வரன் பட ஸ்டில்

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்புவின் 46-வது படமாக உருவாகியுள்ளது ‘ஈஸ்வரன்’. கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால், பாலா சரவணன், நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குறைந்த நாட்களில் படமாக்கி முடிக்கப்பட்ட இத்திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் ஜனவரி 9-ம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 2 நிமிடம் 11 நொடிகளுக்கு ட்ரெய்லர் இருக்கும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் ‘ஈஸ்வரன்’ படத்தின் ட்ரெய்லர் குறித்த தகவல் சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்றே கூறலாம். 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு பெரிய படங்கள் திரைக்கு வருகின்றன.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்த நடிகர் சிம்பு, "ஈஸ்வரன் பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்த படம், மிக குறுகிய காலத்தில் தயாரானது திரையரங்குகளின் மீட்சிக்காக தான். அதற்காகத்தான் இந்த காலத்திலும் வெகு பிரயத்தனப்பட்டு உயிரை பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில்நுட்ப வேலைகள், டப்பிங், எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சி அல்ல. இதற்காக மெனக்கெட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

அதேசமயம் அண்ணன் விஜய் அவர்கள் படம் முடித்து, ஒரு வருடம் ஆகியும் 'மாஸ்டர்' படம் திரையரங்கில் மட்டுமே வரவேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்னை உருவாக்கிய மீடியாவிற்கு செய்யும் மரியாதை. அதில் எனது பங்கும் இருக்க வேண்டும் என விரும்பினேன். நாங்கள் திரையரங்குகளில் உருவானவர்கள், மக்கள் எங்களை திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவதால் வளர்ந்தவர்கள். அவர் நினைத்திருந்தால் மாஸ்டரை ஆன்லைனில் வெளியிட்டு இருக்கலாம். ஆனால் திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வரவேண்டுமென பொறுத்திருந்து வெளியிடுகிறார்.

திருவிழா நாட்களில் எப்போதும் இரண்டு பெரிய படங்கள் வெளிவரும். கலவையான படங்கள் வரும்போது மக்கள் திரையரங்குக்கு பயமின்றி வரத் தொடங்குவார்கள். என் ரசிகர்கள் 'மாஸ்டர்' படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள். திரையரங்குகள் நிறையட்டும், கொரோனா தாண்டி வாழ்க்கையோடு போராடி வெற்றி பெற்று நிற்கும் நாம், நமது மன அழுத்தங்களிலிருந்து வெளியாக வேண்டும். அதற்கு இந்த படங்கள் நிச்சயம் உதவும்.

உங்களை மகிழ்விக்கும் விநியோகஸ்தர்கள், திரையரங்குகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் நல்லபடியாக மீண்டு வர வேண்டும். திரை உலகம் செழிக்க வேண்டும். அதற்கான வாசலை மாஸ்டரும், ஈஸ்வரனும் செய்யும் என்று நம்புகிறேன்.” இவவாறு நடிகர் சிம்பு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்

First published:

Tags: Eeswaran Movie, Kollywood, Simbu