முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Eeswaran Movie Review : சிம்புவின் ‘ஈஸ்வரன்’ எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்

Eeswaran Movie Review : சிம்புவின் ‘ஈஸ்வரன்’ எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்

ஈஸ்வரன்

ஈஸ்வரன்

சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்துக்கு அவரது ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்புவின் 46-வது படமாக உருவாகியுள்ளது ‘ஈஸ்வரன்’. கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால், பாலா சரவணன், நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குறைந்த நாட்களில் படமாக்கி முடிக்கப்பட்ட இத்திரைப்படம் பொங்கலுக்கு திட்டமிட்டபடி வெளியாகுமா என்று கேட்கும் அளவுக்கு பிரச்னைகளை சந்தித்தது. இந்நிலையில் இன்று வெளியான ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

படத்தின் முதல்நாள் முதல் காட்சியைப் பார்த்த பெரும்பாலானோர் சிம்புவின் நடிப்பை பாராட்டியும் பாடல்கள் ரசிக்கும்படி இருப்பதாகவும் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளனர். சிலர் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக ஈஸ்வரனின் கதை அமைக்கப்பட்டிருப்பதாகவும், தமிழில் அறிமுகமான நடிகை நிதி அகர்வாலும் முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில் படத்தின் கதை மற்றும் நடிகர் தேர்வில் கவனம் செலுத்தியிருக்கலாம் என்றும் விமர்சன கருத்துகள் பதிவாகியுள்ளன.

உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்

First published:

Tags: Eeswaran Movie