முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆன்லைனில் வெளியான ’ஈஸ்வரன்’... அதிர்ச்சியில் படக்குழு

ஆன்லைனில் வெளியான ’ஈஸ்வரன்’... அதிர்ச்சியில் படக்குழு

ஈஸ்வரன்

ஈஸ்வரன்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

  • Last Updated :

பொங்கலுக்கு வெளியான ’ஈஸ்வரன்’ திரைப்படம் ஆன்லைனில் வெளியானது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிம்பு நடிப்பில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ‘ஈஸ்வரன்’ திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இதில் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஈஸ்வரன் படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார்.

வெகு நாட்களுக்குப் பிறகு வெளியான  சிம்பு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் ஈஸ்வரன் திரைப்படம் டெலிகிராம் மற்றும் பிற பைரசி வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. அதோடு சமூக வலைதளங்களில் அதன் லிங்க் பகிரப்பட்டதால், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Director suseenthiran