சிம்புவின் ‘மாநாடு’ டீசரை வெளியிடும் பிரபலங்கள்

சிம்புவின் ‘மாநாடு’ டீசரை வெளியிடும் பிரபலங்கள்

’மாநாடு’ திரைப்படத்தில் சிம்பு

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மாநாடு படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளது.

  • Share this:
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

அரசியலை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. பொங்கலுக்கு மோஷன் போஸ்டரை வெளியிட்ட படக்குழு சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 3-ம் தேதி மாநாடு படத்தின் டீசர் வெளியாகும் என்று அறிவித்தது. அதன்படி நாளை மதியம் 2.34 மணிக்கு பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், மலையாள நடிகர் பிரித்விராஜ், கன்னட நடிகர் சுதீப் ஆகியோர் ‘மாநாடு’ படத்தின் டீசரை வெளியிட உள்ளார்கள்.

அதேபோல் சிம்புவின் பிறந்தநாளுக்காக இன்று இரவு ஸ்பெஷல் வீடியோ ஒன்று வெளியிடப்படும் என‘பத்துதல’ படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சிம்புவின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவரது வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் கூடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு தான் வெளியூர் செல்வதால் ரசிகர்கள் வந்து வீட்டு முன் காத்திருந்து ஏமாற்றமடைய வேண்டாம் என்றும் நேரடியாக சந்திக்கும் நிகழ்வை விரைவில் ஒருங்கிணைப்பேன் என்றும் சிம்பு தெரிவித்திருந்தார்.
Published by:Sheik Hanifah
First published: