மீண்டும் ‘வாலு’ பட இயக்குநர் உடன் கரம் கோர்க்கும் சிம்பு

நடிகர் சிம்பு

விஜய் சந்தர் நடிப்பில் மீண்டும் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 • Share this:
  விஜய் சந்தர் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் வாலு. சிம்பு, ஹன்சிகா, விடிவி கணேஷ், சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தை நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

  இந்தப் படத்திற்கு பின்னர் ஸ்கெட்ச், சங்கத் தமிழன் உள்ளிட்ட படங்களை விஜய் சந்தர் இயக்கினார். தற்போது மீண்டும் சிம்பு நடிக்கவுள்ள படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவாரத்தை நடைபெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  கொரோனா பிரச்னை முடிந்த பின்னர் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சிம்பு - விஜய் சந்தர் கூட்டணி டெம்பர் தமிழ் ரீமேக்கில் இணைய உள்ளதாக இருந்து, சில காரணங்களால் அது நடக்க முடியாமல் போனது.

  தற்போது ஹன்சிகாவின் மஹா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் மாநாடு படத்திலும் சிம்பு நடித்து வருகிறார். மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா லாக்டவுனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க:விஜய், சூர்யாவுக்கு பாதுகாவலராக இருந்தவர் மரணம் - நடிகர்கள் இரங்கல்

  பார்க்க: பாரதி கண்ணம்மா வெண்பாவின் கலக்கல் க்ளிக்ஸ்
  Published by:Sheik Hanifah
  First published: