அம்மாவின் அன்பு... லைக்ஸை குவிக்கும் சிம்பு வீடியோ!

அம்மாவின் அன்பு... லைக்ஸை குவிக்கும் சிம்பு வீடியோ!

பெற்றோர்களுடன் சிம்பு

தனது வாழ்க்கையின் அற்புத தருணங்களை தவறாமல் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளும் சிம்பு, இப்போது ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 • Share this:
  அம்மா பாசத்தை பறைசாற்றும் சிம்புவின் வீடியோ ஒன்று நெட்டிசன்களின் மனதை கவர்ந்திருக்கிறது.

  சுசீந்திரன் இயக்கத்தில், சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. வெகு நாட்கள் கழித்து வெளியான சிம்பு திரைப்படம் என்பதால், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து ’மாநாடு’, ‘பத்து தல’ என தனது அடுத்தப் படங்களில் பிஸியாக உள்ளார் சிம்பு.




  தனது வாழ்க்கையின் அற்புத தருணங்களை தவறாமல் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளும் சிம்பு, இப்போது ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். பழைய வீடியோவான அதில், சிம்புவின் அம்மா அவருக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார். அப்போது அவரது தங்கை மகன் ஜேசன், ‘ஏன் அவர் ஊட்டி விடுகிறார்’ எனக் கேட்கிறான். அதற்கு, “உன் அம்மா உனக்கு ஊட்டி விடுவதைப் போல என் அம்மா எனக்கு ஊட்டி விடுகிறார்” என பதில் கூறுகிறார் சிம்பு.

  அம்மாவின் அன்பை பறைசாற்றும் இந்த வீடியோ, நெட்டிசன்களிடம் லைக்ஸை குவித்து வருகிறது.



  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: