மீண்டும் சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணி...? மாநாடு அப்டேட்

சிம்பு

மாநாடு படம் கைவிடப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் ‘மகா மாநாடு’ என்ற படத்தை தானே தயாரித்து, இயக்கி, நடிக்கவும் சிம்பு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

  • News18
  • Last Updated :
  • Share this:
    சிம்பு-வெங்கட் பிரபு கூட்டணியில் மாநாடு படம் மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பார்ட்டி படத்தை அடுத்து சிம்புவுடன் மாநாடு படத்துக்காக கைகோர்த்தார் வெங்கட் பிரபு. அரசியலை மையப்படுத்திய மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமானார்.

    மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் பல மாதங்களாக சினிமா படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. காலமும் நேரமும் கடந்துகொண்டே போவதால் படத்தைக் கைவிடுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

    மேலும் வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு விரைவில் தொடங்கும் என்றும் அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறியிருந்தார்.

    இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சிம்பு. மேலும் மாநாடு படத்தில் மீண்டும் இணைய சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மீண்டும் சுரேஷ் காமாட்சி - வெங்கட் பிரபு - சிம்பு கூட்டணி இணைந்து விரைவில் மாநாடு படத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

    மாநாடு படம் கைவிடப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் ‘மகா மாநாடு’ என்ற படத்தை தானே தயாரித்து, இயக்கி, நடிக்கவும் சிம்பு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் ரூ.125 கோடி செலவில் 5 மொழிகளில் படமாக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

    Also watch

    Published by:Prabhu Venkat
    First published: