மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் செம ஹிட்டான பாடல்கள் - வீடியோ

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் செம ஹிட்டான பாடல்கள் - வீடியோ

நடிகை சில்க் ஸ்மிதா

நடிகை சில்க் ஸ்மிதாவின் திரைப்பயணத்தில் சூப்பர் ஹிட் அடித்த பாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

  • Share this:
ஆந்திர மாநிலத்தில் விஜயலட்சுமி ஆக பிறந்த சில்க் ஸ்மிதா நான்காம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி சென்றவர். சிறுவயதிலேயே திருமணம் ஆகி மணமுறிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் சில்க் ஸ்மிதா நடிகையாக வேண்டும் என்ற கனவுகளுடன் சென்னைக்கு வந்தார்.

வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நடிகை சில்க் ஸ்மிதாவை ஏவிஎம் ஸ்டுடியோவிற்கு எதிரில் சந்தித்த இயக்குனர் வினுசக்கரவர்த்தி வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் சாராய வியாபாரியாக நடிக்க விஜயலட்சுமிக்கு வாய்ப்பு வழங்கினார்.

தன்னுடைய திரை பெயரை ஸ்மிதா என மாற்றிக்கொண்ட விஜயலட்சுமி முதல் படத்தில் அவருக்கு புகழ் சேர்த்த சில்க் என்ற பெயரையும் உடன் சேர்த்துக்கொண்டார். முதல் படத்திற்கு பின்னரே நடிகை சில்க் ஸ்மிதா விற்கு தமிழில் வாய்ப்புகள் குவிய தொடங்கின. கிறங்க வைக்கும் கண்களும், திராவிட நிறமும் சில்க் ஸ்மிதாவை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றன.

அன்றைய தேதியில் தமிழில் உருவான எல்லா திரைப்படங்களிலும் சில்க் ஸ்மிதா கட்டாயம் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் விரும்பினர். இதன்காரணமாக குறுகிய காலகட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார் சில்க் ஸ்மிதா.

பெரும்பாலான திரைப்படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களே வழங்கப்பட்டாலும் நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது சில்க் ஸ்மிதாவின் கனவு. மிகக் குறுகிய வாய்ப்புகளே நடிக்க கிடைத்தாலும் கிடைத்த வாய்ப்புகளில் அசாத்திய நடிப்பால் சக கலைஞர்களை துவம்சம் செய்தார் சில்க் ஸ்மிதா. பாரதிராஜா இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை, நேற்று பெய்த மழையில், மூன்றாம் பிறை என சில்க் ஸ்மிதா கவர்ச்சி கடந்து நடிப்பிலும் முத்திரை பதித்தார்.

மர்மங்களால் நிறைந்த சில்க்ஸ்மிதாவின் இறுதி வாழ்க்கையில் தாடிக்கார டாக்டர் என்ற பெயர் இன்றளவும் யாரென கண்டுபிடிக்கப்படாமல் மர்மமாகவே இருந்து வருகிறது. புகழின் உச்சியில் இருந்த சில்க் ஸ்மிதா மரணமடைந்து ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் யாரும் பெற்றுக்கொள்ள ஆள் இல்லாத அனாதை பிணமாக வைக்கப்பட்டிருந்தார்.

தகவல் கிடைத்த பின்னரே அவரது உறவினர்களும் பெற்றோரும் வந்து சில்க் ஸ்மிதாவின் உடலை பெற்றுக்கொண்டனர். எனினும் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் சில்க் ஸ்மிதா கொலை செய்யப்பட்டார் என்றும் அவரது உறவினர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. புகழின் உச்சியில் இருந்தபோதும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல மர்மங்களை ஒளித்து வைத்திருந்த சில்க் ஸ்மிதா மரணத்தின் போதும் மர்மங்களோடே மண்ணுலகை விட்டு மறைந்தார்.

இருப்பினும் தென்னிந்திய திரையுலகில் அவர் நடித்த படத்தில் சில பாடல்களும் செம ஹிட் கொடுத்துள்ளன. இன்று கூட அந்த பாடல்கள் கோல்டன் ஹிட்ஸ் ஆக ஒலித்து வருகிறது. மறைந்த நடிகையின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சில ஹிட் பாடல்களின் தொகுப்பை காணலாம்.

1. அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி..!!

1984ம் ஆண்டு வெளியான இந்த பாடல் சில்கின் ஸ்மிதாவின் சூப்பர் ஹிட்களில் ஒன்றாகும். நீங்கள் கேட்டவை என்ற திரைப்படத்தில் இந்தஸ் பாடல் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடலை எஸ்.பி பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி ஆகியோர் பாடியுள்ளனர்.

https://youtu.be/VMcGyINS5WM

2. நானே ராஜா..!!

1984 -ம் ஆண்டு வெளியான நீங்கல் கேட்டவை படத்திற்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ்.ஜானகி ஆகியோர் பாடிய மற்றொரு பாடல் தான் நானே ராஜா. வழக்கமான 80களின் டிஸ்கோ அதிர்வுகளைக் இந்த பாடல் கொண்டிருப்பதால் நடிகையின் அடுத்த ஹிட் பாடலாக அமைந்துள்ளது.

https://youtu.be/G9NW0nuXGkk

3. சச்சி நா கடுபுனா..!!

தெலுங்கு திரையுலகில் 1983ம் ஆண்டு வெளியான த்ரில்லர் திரைப்படமான தான் கூடாச்சாரி நம்பர் 1. இந்த படத்தில் நடிகர் சிரஞ்சீவி ஜோடியாக சில்க் ஸ்மிதா இடம்பெற்றுள்ளார்.

https://youtu.be/Xt_CSvSIPY0

4. தர்வாஜா பந்த் பந்த்..!!

ரியல் ஹீரோ திரைப்படத்தில் வெளியான இந்த பாடலில் நடிகர் கிருஷ்ணா ஜோடியாக சில்க் ஸ்மிதா நடித்துள்ளார். 1995ம் ஆண்டு வெளியான திரைப்படத்தை மன்னே ராதாகிருஷ்ணா இயக்கியுள்ளார்.

https://youtu.be/zPoMFDixmNo

5. ஓபனா உய்யாலா..!!

இந்த காதல் பாடலில் சில்க் ஸ்மிதா மற்றும் பானுசந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த பாடல் 1985 ஆம் ஆண்டு வெளியான மாயா லாடி திரைப்படத்தின் ஒரு பகுதியாகும்.

https://youtu.be/w33S11r3jZc

இதுதவிர 1982ம் ஆண்டு வெளியான மூன்று முகம் படத்தில் எத்தனையோ என்ற பாடல், 1994ல் வெளியான ஒரு வசந்த கீதம் படத்தில் தண்ணீரின்றி பாடலும் இவருக்கு ஹிட் கொடுத்தது. மேலும் மலையாளம், தெலுங்கு பாடல்கள் பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.
Published by:Sheik Hanifah
First published: