மாப்பிள்ளையுடன் காரில் வலம் வரும் சிம்பு - வீடியோ

மாப்பிள்ளையுடன் காரில் வலம் வரும் சிம்பு - வீடியோ

தங்கை மகனுடன் சிம்பு

தனது தங்கை மகனுடன் காரில் செல்லும் வீடியோவை நடிகர் சிம்பு சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு கடந்த அக்டோபர் மாதத்தில் சோஷியல் மீடியாவில் இணைந்தார். அதில் தனது படங்கள் குறித்த அறிவிப்புகள், புதிய புகைப்படங்களை பதிவிட்டு வரும் அவர் தனது தங்கை இலக்கியாவின் மகன் ஜேசன் உடன் காரில் செல்லும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருக்கும் நடிகர் சிம்பு, தனது மாப்பிள்ளையிடம் பக்கத்தில் இருக்கும் காருக்கு செல்கிறாயா என்று செல்லமாக பேசி, அருகே இருக்கும் காரில் உள்ளவர்களுக்கும் ஹாய் சொல்கிறார். இந்த வீடியோ சிம்பு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

கொரோனா ஊரடங்கில் தனது உடல் எடையை முழுவதுமாகக் குறைத்து புதிய லுக்குக்கு மாறிய சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்தார். அதேபோல் படத்தின் அனைத்து பணிகளையும் 40 நாட்களுக்குள் முடித்துக் கொடுத்தார் சிம்பு.

சமீபத்தில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்தப் படத்தின் போஸ்டர்களும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
‘மாநாடு’ படத்தை அடுத்து கன்னட மொழியில் வெளியாகி ஹிட் அடித்த முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் சிம்பு. இத்திரைப்படத்தை சில்லுனு ஒரு காதல் பட இயக்குநர் கிருஷ்ணா இயக்க உள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: