சில்லுனு ஒரு காதல் இயக்குநரும் சிம்புவும் இணையும் ‘பத்து தல’

சில்லுனு ஒரு காதல் இயக்குநரும் சிம்புவும் இணையும் ‘பத்து தல’

சிம்பு

சில்லுனு ஒரு காதல் பட இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

  • Share this:
நடிகர் சிம்பு, சுசீந்திரன் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘ஈஸ்வரன்’ படம் 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. அதைத்தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதனிடையே கன்னடத்தில் வெளியாகி ஹிட் அடித்த ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் குறித்த அறிவிப்பு வெளியானது. கன்னடத்தில் இயக்கிய நரதனே தமிழிலும் சிம்பு, கவுதம் கார்த்திக் நடிப்பில் தமிழ் ரீமேக்கை இயக்க ஒப்பந்தமானார்.

இந்நிலையில் நரதன் இயக்க ஒப்பந்தமான அந்தப் படம் கைவிடப்பட்டு தற்போது சில்லுனு ஒரு காதல் பட இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் முஃப்தி ரீமேக் உருவாகிறது. இந்தப் படத்துக்கு ‘பத்து தல’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சிம்பு, கவுதம் கார்த்திக் உடன் இணைந்து நடிக்க இருக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

பத்து தல படம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறுகையில், “எஸ்டிஆர் அதீதமான சுறுசுறுப்புக்கும், உற்சாகத்திற்கும் பெயர் பெற்றவர் தற்போது தன்னையே முழுதாக மாற்றி வேறொரு பரிணாமத்தில் படு உற்சாகமாக அவர் வந்து நிற்பது, பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இத்திரைப்படம் முடிவான உடனேயே அவரது கதாப்பாத்திரத்தை ஒட்டி, மிகச்சரியான, அதிரடியான தலைப்பை தேடினோம்.

பல்வேறு பெயர்களை பரிசீலித்த பின்னால் “பத்து தல” தலைப்பு உறுதிசெய்யப்பட்டது. ரசிகர்கள் படம் பார்க்கும் தலைப்பின் அர்த்தத்தை அதன் ஆழத்தை படம் வழியே கண்டிப்பாக உணர்வார்கள். கௌதம் கார்த்திக் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துடன் ஏற்கனவே பணிபுரிந்துள்ளார். எங்களை பொறுத்தவரையில் அவர் எங்கள் குடுமபத்தில் ஒருவர். இந்தப் படத்தில் அவரது பாத்திரம் வெகு கனமானது. அவரது திரை வாழ்வில் அவருக்கு மிகப்பெரும் பெயரை பெற்றுத்தரும் படமாக ‘பத்து தல’ இருக்கும்.” என்று கூறினார்.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published: