Home /News /entertainment /

பத்து தல படத்தின் அட்டகாச அப்டேட்... மகிழ்ச்சியில் சிம்பு ரசிகர்கள்!

பத்து தல படத்தின் அட்டகாச அப்டேட்... மகிழ்ச்சியில் சிம்பு ரசிகர்கள்!

Pathu Thala

Pathu Thala

Silambarasan TR | இப்படத்தில் கௌதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாகவும், சிம்பு கேங்ஸ்டராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா லாக்டவுன் காலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சிம்பு தனது உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக உருவெடுத்தார். மாநாடு படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு கம்பேக் கொடுத்த சிம்பு, தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் திரைப்படம் 'பத்து தல'. இப்படத்தை 'சில்லுன்னு ஒரு காதல்' புகழ் ஓபேலி கிருஷ்ணா இயக்குகிறார். கன்னடத்தில் ஷிவ ராஜ்குமார், ஸ்ரீமுரளி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற 'முப்தி' படத்தின் ரீமேக்கே தமிழில் பத்து தல ஆகும். இப்படத்தை கன்னடத்தில் அறிமுக இயக்குனர் நார்த்தன் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் கௌதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாகவும், சிம்பு கேங்ஸ்டராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் ஊரடங்கு விலகியதும் கௌதம் கார்த்திக் சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டன. இன்னும் சிம்புவின் காட்சிகள் மற்றும் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் சிம்புவின் காட்சிகள் இன்னும் முடிக்கப்படவில்லை.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



நடிகர் சிலம்பரசன் 'பத்து தலை' படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதத்தில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பை மே 27 முதல் தொடங்குவார் என்றும், ஒரு மாதத்திற்கும் மேலாக திட்டமிடப்பட்டிருந்த படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read : இவருடன் டேட்டிங் செல்வது மிகவும் கடினம்...  பிரியா பவானி சங்கர்.!

இப்படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர், மெட்ராஸ் புகழ் கலையரசன், மனுஷியபுத்திரன் மற்றும் அசுரன் புகழ் டீஜய் ஆகியோரும் நடிக்கின்றனர்.



இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சில்லுனு ஒரு காதலுக்கு அடுத்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் ஓபேலி கிருஷ்ணா, ஏ.ஆர்.ரஹ்மானுடன் மீண்டும் இப்படத்தில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : கிளாமரில் கலக்கும் சமந்தாவின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஸ்..

சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்திலிருந்து முதல் லிரிக்கல் வீடியோ பாடலாக 'காலத்துக்கும் நீ வேணும்' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார்.
Published by:Selvi M
First published:

Tags: Entertainment, Gautham karthik, Silambarasan

அடுத்த செய்தி