மிஷ்கின் படத்துக்காக அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த சித் ஸ்ரீராம்

சித் ஸ்ரீராம் - மிஷ்கின்

மிஷ்கின் - சித் ஸ்ரீராம் கூட்டணியில் ’சைக்கோ’ படத்தில் ’உன்ன நெனச்சு’ என்ற மெலடி பாடல் ரசிகர்களிடம் பெரும் வெற்றி பெற்றது.

 • Share this:
  இயக்குநர் மிஷ்கின் இயக்கி வரும் பிசாசு 2 படத்தில் மனதை உருக்கும் ஒரு மெல்லிசைப் பாடலை பாடியிருக்கிறார் பாடகர் சித் ஸ்ரீராம்.

  ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’ நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு இசை கார்த்திக் ராஜா.

  பிசாசு 2 படத்தில் பிரபல பாடகர் சித் ஶ்ரீராம் அழகான மெலடி பாடலை பாடியுள்ளார். அமெரிக்காவில் இருந்த அவர், பாடலின் வரிகளும், மெட்டும் மிகவும் பிடித்துப் போகவே அங்கிருந்து சென்னை வந்து இந்தப் பாடலை பாடி கொடுத்துள்ளார். மிஷ்கின் - சித் ஸ்ரீராம் கூட்டணியில் ’சைக்கோ’ படத்தில் ’உன்ன நெனச்சு’ என்ற மெலடி பாடல் ரசிகர்களிடம் பெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து பிசாசு 2 படத்தின் பாடலும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.

  தவிர இந்தப் படத்திற்காக சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்காவும், பாடகி ஶ்ரீநிதியும் ஒரு பாடலை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: