• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மாயோன் படத்தின் டப்பிங்கை முடித்த சிபி ராஜ்...!

மாயோன் படத்தின் டப்பிங்கை முடித்த சிபி ராஜ்...!

சிபி ராஜ்

சிபி ராஜ்

மாயோன் படத்தில் நடிகர் சிபிராஜ், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங்கை முடித்ததாக கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
5,000 வருடங்கள் பழமையான கோயிலைச் சுற்றி நடக்கும் மர்மத்தை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் மாயோன். சிபி நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

கோயில், அதுசார்ந்த மர்மங்களுக்கு எப்போதுமே சுவாரஸியம் உண்டு. மாயோன் படத்தை அதே சாயலில் இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கிஷோர். சிபி, தான்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் பெராடி, கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி நடித்திருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீ கிரீன் நிறுவனம் 2018 இல் தொடங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



பிறகு சில காரணங்களால் படம் நின்றுபோக, டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் படத்தை வாங்கி படப்பிடிப்பை தொடர்ந்தது. தற்போது அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. தான் சம்பந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங்கை முடித்ததாக சிபி கூறியுள்ளார்.

Also read... கலர்ஸ் தமிழில் துவங்கியது இதயத்தை திருடாதே சீசன் 2... ரசிகர்கள் உற்சாகம்!

மாயோனில் சிபியும், தான்யாவும் தொல்லியல் துறையில் பணிபுரிகிறவர்களாக நடித்துள்ளனர். அவர்களின் உயரதிகாரியாக கே.எஸ்.ரவிக்குமாரும், ஊர் பெரியவராக ராதாரவியும் வருகின்றனர். வில்லனாக ஹரிஷ் பெராடி. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்ததும் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: