"தொற்றுநோய் முடிவுக்கு வரும் வரை காத்திருக்க முடியாது" -வேலைக்கு செல்வது பற்றி மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன்

முகக்கவசங்கள் இல்லாமல் செட்டில் இருப்பது பயமாக இருந்தாலும், நிதிக் குறைபாடு காரணமாக நான் மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.

  • Share this:
உலகளாவிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், வைரசால் பாதிக்கப்படாமல் பாசிட்டிவாக இருக்க முயற்சிப்பதற்கும் இடையில், பலர் தங்கள் வேலைகளை செய்வது மிகவும் கடினம். சிலர் தங்களது வேலையை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் இப்போது கொரோனா தொற்று பீதியுடன் பலர் நிதி நெருக்கடிகளை எதிர்த்துப் போராடி வருகின்றனர். பிரபலங்கள் கூட வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களால் வெளியே சென்று வேலை செய்ய முடியவில்லை.

இந்த நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் நிதி தடைகளை எதிர்கொள்வது குறித்து சில தகவல்களை செய்தி ஊடகத்துடன் பகிர்ந்து கொண்டார். வேலைக்குச் செல்வது பற்றியும் அவர் மனம் விட்டு பேசியுள்ளார். மேலும் கொரோனா தொற்றுநோய் முடிவுக்கு வரும் வரை காத்திருக்க முடியாது என்றும் ஒளிந்திருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதுபோன்ற நேரத்தில் ஷூட்டிங் நடத்துவது எளிதல்ல என்று தனக்குத் தெரியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும் நிதி விஷயத்தில் அவரது பெற்றோர் அவருக்கு உதவாததால் தனது சொந்த கட்டணங்களை தானே செலுத்த வேண்டியுள்ள நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் இந்துஸ்தான் டைம்ஸுக்கு அவர் அளித்த பேட்டியில், தொற்றுநோய்களின் போது பணியாற்றுவது குறித்து ஸ்ருதி விரிவாகக் கூறினார். முகக்கவசங்கள் இல்லாமல் செட்டில் இருப்பது பயமாக இருந்தாலும், நிதிக் குறைபாடு காரணமாக நான் மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றாற்போல குறிப்பிட்ட அளவு பணம் சம்பாதிக்கிறார்கள். மேலும் அனைவரும் தங்களைத் தற்காத்துக் கொள்ள பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கும். இது தனக்கும் பொருந்தும் என்று கூறினார்.

குழுவினர் படப்பிடிப்புக்குத் தயாராக இருக்கும் போது, அவர் தனது வேலையைச் செய்ய வெளியே செல்ல வேண்டும் மற்றும் அவரது தொழில்முறை கடமைகள் அனைத்தையும் முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ருதி மேலும் கூறுகையில், "நான் ஒரு சுயாதீனமான பெண், எனது சொந்த பில்களை நானே செலுத்திக் கொள்கிறேன். அதற்காக நான் மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டும். மேலும் தனக்கென சொந்த வரம்புகள் இருப்பதாகவும், தன்னுடைய பில்களை எனது பெற்றோர் செலுத்தமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஸ்ருதி பன்முக நடிகை சரிகாவுக்கும் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கும் பிறந்த மகள்.

இவர் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். ராமையா வாஸ்தவையா படம் மூலம் தெலுங்கு திரையுலகில் பிரபலமடைந்த அவர் கடைசியாக தெலுங்கு அதிரடி படமான கிராக்-ல் ரவி தேஜா ஜோடியாக நடித்திருந்தார். கடந்த ஆண்டு, வித்யுத் ஜம்வாலுடன் இணைந்து ZEE5 திரைப்படமான யாரா- விழும், அமேசான் பிரைம் ஒரிஜினலில் புதம் புது காலை என்ற தொடரிலும் தோன்றினார். ஸ்ருதி தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் என்ற தமிழ் படத்திலும், தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக சலார் ஆக்சன் திரில்லர் படத்திலும் நடித்து வந்தார். அவர் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான பிட்டா கதலுவிலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published: