திருமணம் குறித்து தீயாக பரவிய தகவல் - ஸ்ருதிஹாசன் பதில்

திருமணம் குறித்து தீயாக பரவிய தகவல் - ஸ்ருதிஹாசன் பதில்

நடிகை ஸ்ருதிஹாசன்

திருமணம் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்விக்கு நடிகை ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார்.

  • Share this:
கமல்ஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தமிழில் ‘சிங்கம் 3’ படத்துக்குப் பின்னர் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்தார். இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன் பிரிட்டிஷ் நடிகர் மைக்கேல் கோர்சல் என்பவருடன் நட்பாக பழகி வந்தார்.

பின்னர் இருவருக்குள்ளும் இருந்த நட்பு காதலாக மாறியது. சென்னையில் நடந்த ஆதவ் கண்ணதாசனின் திருமண விழாவில் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டனர். மேலும் மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருவரும் ஒன்றாகவே வலம் வந்தனர்.விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 2019-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி ஸ்ருதிஹாசன் தனது சமூகவலைதள பக்கத்தில், என் வாழ்க்கையில் மீண்டும் ஒரு புதிய பாதை ஆரம்பமாகிறது. ஆழமான இருண்ட இடத்தில் தான் ஒளி பிரகாசமாக வெளிப்படும். மேலும் இசை, மேலும் படங்கள் என எதிர்நோக்கியுள்ளேன். என்னுடன் நான் இருப்பதே சிறந்த காதல் கதையாக இருக்கிறது” என்று கூறியிருந்தார்.

மேலும் படிக்க: ஹரி - அருண் விஜய் படத்தில் நடிக்கும் ப்ரியா பவானி சங்கர்?

இதையடுத்து மைக்கேல் கோர்சல் - ஸ்ருதிஹாசன் இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது சிங்கிளாக இருக்கும் ஸ்ருதிஹாசனுக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப, திருமணம் குறித்த தகவலில் உண்மை இல்லை என்று மறுத்துள்ளார். மேலும் முன்னாள் காதலரை வெறுக்கிறீர்களா என்ற கேள்விக்கு நான் யாரையும் வெறுக்கவில்லை என்று பதிலளித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: