Home » News » Entertainment » SHRUTI HAASAN REACTION GROPING WITHOUT SKIN CONTACT NOT SEXUAL ASSAULT RULES BOMBAY HIGH COURT IN A POCSO CASE MSB

பாலியல் வன்கொடுமை பற்றிய நீதிமன்ற தீர்ப்புக்கு ஸ்ருதிஹாசன் ரியாக்‌ஷன்

பாலியல் வழக்கு ஒன்றில் மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவாதபொருளாகியுள்ளது

பாலியல் வன்கொடுமை பற்றிய நீதிமன்ற தீர்ப்புக்கு ஸ்ருதிஹாசன் ரியாக்‌ஷன்
ஸ்ருதி ஹாசன்
  • Share this:
இருவரது உடல் சருமம் நேரடி தொடர்பில் இல்லாத போது சிறுமியின் மார்பைக் கையால் பிடித்தது பாலியல் வன்கொடுமையின் கீழ், அதாவது போக்சோ சட்டத்தின் கீழ் வராது என்று மும்பை உயர் நீதிமன்றம் பாலியல் வழக்கு ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஜனவரி 19-ம் தேதியன்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை அளித்த தீர்ப்பில் நீதிபதி புஷ்பா கேந்திவாலா வாசித்த தீர்ப்பின் நகல் வெளியாகி அது தற்போது விவாதப்பொருளாகியுள்ளது. இருவரது உடல் சருமத்தின் தொடர்பில்லாமல் சிறுமியின் மார்பைக் கையால் பிடித்தது பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை ஆகாது என்று அவர் தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

39 வயது நபர் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் அமர்வு நீதிமன்றம் அந்த 39 வயது நபரை குற்றவாளி என்று தீர்ப்பளித்து போக்சோ சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்தது. சதீஷ் என்ற அந்த நபர் சம்பந்தப்பட்ட சிறுமியை நாக்பூரில் தன் வீட்டுக்கு அழைத்து சென்று சாப்பிட ஏதாவது தருகிறேன் என்ற பெயரில் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக வழக்கு எழுந்தது.


ஆனால் அங்கு சதீஷ் சிறுமியின் மார்பைப் பிடித்து, அவரது ஆடையை அவிழ்க்க முயன்றுள்ளார். ஆனால், ஆடையைக் களையாமல்தான் அவர் சிறுமியின் மார்பைப் பிடித்துள்ளார் என்று நீதிபதி தன் தீர்ப்பில் கூறியிருப்பது விவாதப்பொருளாகியுள்ளது.

அதாவது இருவரது சருமமும் நேரடித் தொடர்பில் இல்லை எனவே இது பாலியல் தாக்குதலாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறி 3 ஆண்டுகள் தண்டனையை ஒரு ஆண்டாகக் குறைத்துள்ளார். அதாவது பெண்ணின் மானத்துக்கு களங்கம் கற்பிக்க முயன்றார் என்ற அளவில்தான் தண்டிக்க முடியும் என்பதே அதன் தீர்ப்பு.

தீர்ப்பில் நீதிபதி புஷ்பா கூறும்போது, “குற்றவாளிக்கு அளித்த கடும் தண்டனைக்கு மேலும் சில வலுவான ஆதாரங்கள் தேவை. சிறுமியின் மேலாடையை அகற்ற முயன்றாரா அல்லது மேல்சட்டைக்குள் கையை விட்டு மார்பை அமுக்கினாரா என்பது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலுவான ஆதாரங்கள் தேவை. அப்படியில்லையெனில், தோலுக்குத் தோல் நேரடியாகத் தொடர்பில்லை எனில் அது பாலியல் தாக்குதல் ஆகாது.ஆனால் இது பெண்மையின் மானத்துக்கு களங்கம் கற்பிப்பது என்பதால் அந்த வகையில் தண்டனை வழங்குகிறோம்” என்று கூறியுள்ளார். போக்சோ சட்டத்தில் கூறியிருக்கும் உடல் ரீதியான தொடர்பு என்பது தோலுக்குத் தோல் தொடர்பைத்தானே தவிர உடல் ரீதியான தொடர்பு என்றாலே குற்றம் என்பதாக குறிப்பிடவில்லை என்றார் நீதிபதி.



இதுகுறித்து சமூகவலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன், “இது அபத்தமானது. குழந்தைகளை பாதுகாப்பதில் மீண்டும் தோல்வியடைந்துள்ளோம். இன்னும் சொல்லப்போனால் இன்னும் ஒருபடி கீழே சென்றிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
First published: January 25, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories