திருமணம் எப்போது என்ற ரசிகரின் கேள்விக்கு நடிகை ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகிறார். தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன் பிரிட்டிஷ் நடிகர் மைக்கேல் கோர்சல் என்பவருடன் நட்பாக பழகி வந்தார்.
இருவருக்குள்ளும் இருந்த நட்பு காதலாக மாறியதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் கசிந்தன. சென்னையில் நடந்த ஆதவ் கண்ணதாசனின் திருமண விழாவில் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டனர். மேலும் மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருவரும் ஒன்றாகவே வலம் வந்தனர்.
விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில் ட்விட்டரில் ஸ்ருதிஹாசனைப் பின் தொடரும் ரசிகர் ஒருவர், உங்களது திருமணம் எப்போது? திருமணத்தின் போது எங்களுக்கு அழைப்பு விடுத்தால் நாங்கள் அனைவரும் கலந்துகொள்வோம் என்று கூறியிருந்தார்.
You’ll be waiting a VERY long time 😂 so let’s do a birthday together instead lol https://t.co/5wgmNIOLc1
ரசிகரின் இந்தப் பதிவுக்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், என்னுடைய திருமணத்துக்கு நீங்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். அதற்கு முன்னர் என்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வாருங்கள். சேர்ந்து கொண்டாடுவோம்” என்று கூறியுள்ளார்.
வீடியோ பார்க்க: நாயகிகள் ஜெயித்த கதை!
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.