ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நிகழ்ச்சியில் தனது அம்மாவுடன் கலந்து கொண்ட கவுதம் மேனன்

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நிகழ்ச்சியில் தனது அம்மாவுடன் கலந்து கொண்ட கவுதம் மேனன்

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் | கவுதம் மேனன்

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் நிகழ்ச்சியில் இயக்குநர் கவுதம் மேனன் அவரது தாயாருடன் கலந்து கொண்டுள்ளார்.

 • Share this:
  கொரோனா காலகட்டத்தை ஓரளவுக்கு சுமை குறைந்ததாக தனது பார்வையாளர்களுக்கு ஆக்கவேண்டும் மற்றும் புதிய மற்றும் புத்தாக்கமான நிகழ்ச்சிகளின் மூலம் அவர்களை ஈடுபாடுகொள்ளச் செய்யவேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் 'சிந்தனைகள் சிம்ளிஃபைடு' என்ற பெயரில் தி ஆர்ட் ஆஃப் லிவ்விங் அறக்கட்டளையின் ஒத்துழைப்போடு உரையாடல் அடிப்படையிலான டாக் ஷோ நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் வழங்குகிறது.

  இதயத்திற்கு இதயம் உரையாடுகின்ற, உத்வேகத்தை உயர்த்துகின்ற ஒரு நிகழ்ச்சியாக அமைந்திருக்கும் இது, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் காலை 11.00 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது. ஆர்ட் ஆஃப் லிவ்விங் ஃபவுண்டேஷனின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபல தமிழ் ஆளுமைகளோடு இந்நிகழ்ச்சியில் மனம் திறந்து உரையாடி வருகிறார்.

  லட்சுமி ராமகிருஷ்ணன் உடன் கடந்த வாரம் நிகழ்ந்த அற்புதமான உரையாடல் நிகழ்வைத் தொடர்ந்து, இந்த வாரம் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் உடன் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கலந்துரையாடுகிறார். இந்நிகழ்ச்சியில் கவுதம் மேனனின் தாயாரும் கலந்து கொண்டு தனது ஆன்மீக அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். மேலும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கேட்டுக் கொண்டதன் பேரில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படத்திலிருந்து விரைவில் வெளியிடப்பட உள்ள ஒரு பாடலின் சில வரிகளை கௌதம் மேனன் பாடிக் காட்டியுள்ளார்.  குருதேவின் தீவிர பக்தையான ஜிவிஎம் – ன் அம்மா, அவரது ஆன்மீக அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்காக இந்நிகழ்வில் நுழைவது, அத்தகையதொரு வியப்பூட்டும் ஒரு தருணமாகும். அது மட்டுமல்ல, குருதேவ் கேட்டுக்கொள்வதன் பேரில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படத்திலிருந்து விரைவில் வெளியிடப்பட உள்ள ஒரு பாடலின் சில வரிகளை ஜிவிஎம் பாடிக்காட்டும் நிகழ்வும் இந்த எபிசோடில் இடம்பெறுகிறது.
  Published by:Sheik Hanifah
  First published: