தனது ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் சொன்ன பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல்!

தனது ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் சொன்ன பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல்!

ஸ்ரேயா கோஷல்

நீளம் மற்றும் பச்சை வண்ணம் கலந்த ஆடையை அணிந்திருந்த அவர், வயிற்றை தனது கைகளால் பற்றிக்கொண்டு ஒரு போஸ் கொடுத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பிரபல பின்ணணி பாடகி ஸ்ரேயா கோஷல் தான் கர்ப்பமாக உள்ள விஷயத்தை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அதில், அவர் தற்போது கருவுற்றிருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

    நீளம் மற்றும் பச்சை வண்ணம் கலந்த ஆடையை அணிந்திருந்த அவர், வயிற்றை தனது கைகளால் பற்றிக்கொண்டு ஒரு போஸ் கொடுத்துள்ளார். மேலும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, “குழந்தை #Shreyaditya (ஸ்ரேயாதித்யா) இஸ் ஆன் இட்ஸ் வே! இந்த செய்தியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் ஷிலாதித்யாவும் நானும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் வாழ்க்கையில் இந்த புதிய அத்தியாயத்திற்கு நாங்கள் தயாராகி வருவதால் உங்கள் எல்லா அன்பும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு தேவை, ”என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

    அவரது இந்த செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது பதிவு கிட்டத்தட்ட மில்லியன் கணக்கில் லைக்ஸ் மற்றும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. மேலும், திரையுலக பிரபலங்கள், பாடகர்கள் என அனைவரும் ஸ்ரேயா கோசலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் இமான் அவரது வாழ்த்து செய்தியில், “மனமார்ந்த வாழ்த்துகள் ஸ்ரேயா, உங்கள் அன்பானவரை எனக்காகவும் பாடத் தயார் செய்யுங்கள். அதுவரையிலும் ஆண்டவன் எனக்கு தொடர்ந்து இசையமைக்கும் ஆசீர்வாதத்தைக் கொடுக்கட்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    “உங்கள் வார்த்தைகள் மதிப்புமிக்கது, மிக்க நன்றி, மனதைத் தொட்டுவிட்டது. நீங்கள் சொல்வது உண்மையாகட்டும்,” என இமானின் வாழ்த்துக்கு நன்றி ஸ்ரேயா பதில் கருத்து தெரிவித்துள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by shreyaghoshal (@shreyaghoshal)






    Also read... நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்...!

    ஸ்ரேயா கடந்த 2000ம் ஆண்டில் ஒரு தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவில் பாடல் பாட பங்கேற்றார். அப்போது அவருக்கு 16 வயது. அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த இயக்குநர் சஞ்சய் லீலா பான்சாலி, சிறுமி ஸ்ரேயா குரலில் வியந்து போனார். இதனால் தனது அடுத்த படமான தேவதாஸ் படத்தில் அந்தச் சிறுமிக்கு பாடும் வாய்ப்பையும் கொடுத்தார். அந்தப் படத்தில் சுமார் ஐந்து பாடல்களைப் பாடிய ஒரே சிறுமி என்ற பெயரையும் பெற்றார்.

    இப்போது புகழ் பெற்ற பாடகராக வலம் வரும் ஸ்ரேயா கோஷல் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பிசியாக இருக்கிறார். இதுவரை சிறந்த பாடகருக்கான எண்ணற்ற விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தமிழில் சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெற்ற "முன்பே வா அன்பே வா பாடல்" இவர் குரலில் வெளியாகி ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களையும் அடிமையாக்கியது. இவர் கடந்த 2015ம் ஆண்டு சிலாதித்யா முகோபாத்யாயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: