Vishal: குறும்பட இயக்குநர் சரவணனுடன் அடுத்தப் படத்தில் இணையும் விஷால்!

Vishal: குறும்பட இயக்குநர் சரவணனுடன் அடுத்தப் படத்தில் இணையும் விஷால்!

விஷால்

குறும்பட இயக்குநர் சரவணன் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தில், விஷால் ஹீரோவாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    குறும்பட இயக்குநர் சரவணன் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தில், விஷால் ஹீரோவாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளில், கோலிவுட் திரைப்பட இயக்குநர்களின் வாழ்வில் குறும்படங்கள் எந்தளவுக்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது என்பதை கண்கூடாக பார்த்து வருகிறோம். இயக்குநர்கள் பாலாஜி மோகன், கார்த்திக் சுப்பராஜ் முதல் அருண்குமார், ஆர்.ரவிக்குமார் வரை இதற்கான எடுத்துக்காட்டுகள் நீளும். இப்போது, தனது பாராட்டப்பட்ட குறும்படத்தின் காரணமாக, பெரிய திரையில் இயக்குநராகிறார் சரவணன். விஷால் நடிக்கும் புதிய படத்தை அவர் இயக்குகிறார். மேலும் ஏப்ரல் மத்தியில் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.



    “விஷால் கடந்த ஆண்டு சரவணனின் விருது பெற்ற குறும்படமான ’எது தேவையோ அதுவே தர்மம்’ என்ற படத்தைப் பார்த்தார். மேலும் அவரது திரைப்பட இயக்கம் மற்றும் கதைவடிவத்தில் மிகவும் ஈர்க்கப்பட்டார். எனவே, அவர் ஒரு சந்திப்பிற்கு அழைப்பு விடுத்தார். குள்ளநரி கூட்டம் மற்றும் தேன் போன்ற படங்களில் உதவியாளராக பணியாற்றிய சரவணன் இந்த ஸ்கிரிப்டை விவரித்தபோது, விஷால் உடனடியாக தனது ஒப்புதலைக் கொடுத்தார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் தங்கள் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகளை கேள்வி கேட்பது பற்றியது. இந்த மாதம் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும்” என டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு படக்குழுவினருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். படத்தில் நடிக்கும் ஹீரோயின், மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: