• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அனுமதியின்றி படப்பிடிப்பு - சிவகார்த்திகேயனின் டான் படக்குழு மீது வழக்கு

அனுமதியின்றி படப்பிடிப்பு - சிவகார்த்திகேயனின் டான் படக்குழு மீது வழக்கு

டான் படக்குழு

டான் படக்குழு

முன் அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியதற்காக சிவகார்த்திகேயன் நடித்துவரும் டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி உள்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    டாக்டர் படத்தை முடித்த சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து வருகிறார். ரொமான்டிக் காமெடிப் படமான இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். உடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, பால சரவணன், ராமதாஸ், காளி வெங்கட், மிர்ச்சி விஜய் ஆகியோரும் நடித்து வருகின்றனர்



    பொள்ளாச்சி ஆனைமலை அருகே முன் அனுமதியின்றி சிபி சக்ரவர்த்தி படப்பிடிப்பு நடத்தியுள்ளார். இது காட்டிலாக எல்லைக்குள் வரும் பகுதி என கூறப்படுகிறது. அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியதற்காக 19,400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி உள்பட 17 பேர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    Also Read : உன்ன வெள்ளாவி வச்சுதான் வெளுத்தாங்களா.. நடிகை ஹன்சிகாவின் போட்டோஸ்

    டான் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: