ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'இதயத்தை திருடாதே' ஹீமா பிந்து ரசிகர்களுக்கு இன்னொரு ஷாக்! என்ன கொடுமை சார் இது?

'இதயத்தை திருடாதே' ஹீமா பிந்து ரசிகர்களுக்கு இன்னொரு ஷாக்! என்ன கொடுமை சார் இது?

Colors Tamil | நடிகர் நவீன் குமார், செய்தி வாசிப்பாளர் கண்மணி என்கிறவரை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்கிற தகவல் வெளியானது. இவரும் ஹீமா பிந்துவும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதுவொரு பெரிய ஷாக்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழில், ஸ்டார் விஜய் டிவிக்கு இணையாக வளர்ந்து வரும் இரண்டு முக்கிய சேனல்களாக ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் சேனல்கள் பார்க்கப்படுகிறது. "சீனியர்" ஆன விஜய் டிவிக்கு கடும் போட்டியை அளிக்கும் வண்ணம் "ஜூனியர்" சேனல்களான ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் ஆகிய இரண்டுமே சில அட்டகாசமான சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. குறிப்பாக கலர்ஸ் தமிழ் சேனல்!

அதில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கலர் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் 'இதயத்தை திருடாதே' சீரியல் பலருக்கும் ஃபேவரைட் ஆகும்; சீசன் 1-ஐ அப்படியே நிறுத்திவிட்டு சீசன் 2-வை ஒளிப்பரப்ப தொடங்கிய போதும் கூட ரசிகர்களின் ஆதரவு குறையாத ஒரு சீரியலை ஃபேவரைட் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை.

ஆம்! 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 முதல் ஒளிபரப்பாக தொடங்கிய இதயத்தை திருடாதே சீரியல் ஆனது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஷூட்டிங் நடத்தப்பட முடியாமல் 2020 ஆம் ஆண்டு மார்ச் 21, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பிறகு 2020 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி முதல் மீண்டும் ஒளிபரப்பாக தொடங்கியது.

Read More : குழந்தையுடன் பாரதி கண்ணம்மா வெண்பா... அட்டகாச புகைப்படங்கள்!

இதயத்தை திருடாதே சீரியலின் கதைக்களத்தை விட அதில் நடிக்கும் சஹானா - சிவா கதாபாத்திரத்திற்கு தான் ரசிகர்கள் அதிகம் என்றே கூறலாம். இந்த சீரியலில் சஹானா என்கிற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை ஹீமா பிந்து நடிக்க, இவருக்கு ஜோடியாக சிவா என்கிற கதாபாத்திரத்தில் நவீன் குமார் நடிக்கிறார். இந்த சீரியல் ஜோடி நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாவார்கள் என்று ரசிகர்கள் மனக்கோட்டை கட்டும் அளவிற்கு ஹீமா பிந்துவும், நவீன் குமாரும் நடிப்பில், ரொமான்ஸில் கலக்கினார்கள்.

இதற்கிடையில் சில வாரங்களுக்கு முன்னர், நடிகர் நவீன் குமார், செய்தி வாசிப்பாளர் கண்மணியை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்கிற தகவல் வெளியானது. இவரும் ஹீமா பிந்துவும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதுவொரு பெரிய ஷாக் ஆக இருந்தது. இதற்கிடையில் இதயத்தை திருடாதே சீரியல் ரசிகர்களுக்கும் மற்றும் ஹீமா பிந்து ரசிகர்களுக்கும் இன்னொரு பெரிய ஷாக் நியூஸ் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், இதயத்தை திருடாதே சீரியலில் இருந்து நடிகை ஹீமா பிந்து விலகி உள்ளாராம்.

ஏன்? எதற்காக? என்கிற சரியான காரணம் எதுவும் வெளியாகவில்லை. எனவே ஹீமா பிந்துவே இதுகுறித்து தகவல் தெரிவிக்கும் வரை, நாம் நினைப்பது, கேட்பது எல்லாமே வெறும் யூகங்களாக மட்டுமே இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். இதயத்தை திருடாதே சீரியல் குழு உடன் ஏதாவது பிரச்சினையா அல்லது வேறு சேனலில் நடிக்க கமிட் ஆகி விட்டாரா? அவரே சொன்னால் தான் உண்டு!

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Entertainment, Trending, Viral