வடிவேலு பாட்டுக்கு டான்ஸ் ஆடிய ஷிவானி - இன்ஸ்டாகிராமில் தெறி ஹிட்!

ஷிவானி நாராயணன்.

பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஷிவானி தனது கவர்ச்சிப் படங்களையும், நடன வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கினார்.

 • Share this:
  பிக் பாஸ் ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட, வடிவேலு டான்ஸ் வீடியோ 1 மில்லியன் பார்வைகளை நெருங்குகிறது.

  விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக எதிர்பார்ப்போடு கலந்துக் கொண்டவர் சீரியல் நடிகை ஷிவானி. சீரியல் மற்றும் இன்ஸ்டாகிரம் படம் மற்றும் வீடியோவால் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது. இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட அவரை 2 மில்லியன் மக்கள் ஃபாலோ செய்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் அவருடைய லாக்டவுன் போட்டோ ஷூட்கள் தான்.
  தினமும் 4 மணிக்கு வெளியாகும் அவரது போட்டோவிற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பும் கிடைத்தது. பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஷிவானி தனது கவர்ச்சிப் படங்களையும், நடன வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கினார்.

  இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷிவானி மீண்டும் தனது இன்ஸ்டாகிராமில் டான்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். வடிவேலுவின் "வாடி பொட்ட புள்ள வெளிய" என்ற பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவை பதிவிட்டுள்ள அவர் " தலைவன் பாட்டுக்கு ஆடுறதே தனி சந்தோஷம் தான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: