ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ஷிவானி அம்மா... இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் சம்பவங்கள்

ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ஷிவானி அம்மா... இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் சம்பவங்கள்

ஷிவானி அம்மா

பிக்பாஸ் வீட்டுக்குள் நேற்றைய தினம் ஷிவானியின் அம்மா வந்திருந்தார். இது குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 • Share this:
  இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் தமிழ் பிக்பாஸ் 4-வது சீசனில் நேற்றைய தினம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிக்கட்டத்தில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணாமாக இந்த டாஸ்க் நடைபெறாது என எதிர்பார்க்கப்பட்டது.

  ஆனால் இதற்கு முன் நடந்த சீசன்களை போல இந்த வருடம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தந்துள்ளனர். நேற்றைய தினம் பாலாஜியின் நண்பன் மற்றும் ஷிவானியின் தாயார் வீட்டிற்குள் வருகை தந்தனர்.

  வீட்டிற்குள் வந்தவுடன் ஷிவானியின் தாயார் அவரை ஏன் நீ தனித்தன்மையோடு உன் டாஸ்கை விளையாடவில்லை, பாலாஜிக்கு கிறிஸ்துமஸ் பரிசுப் பொருள் வழங்கியது ஏன் என திட்டி தீர்த்துவிட்டு இறுதியாக ஆறுதல் வார்த்தைகள் கூறினார்.

  இதனிடையே ட்விட்டரில் ஷிவானி ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது. இதில் ஷிவானி அம்மாவின் வருகை குறித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

   

      

      

      

      

      

      

      

      

      
  Published by:Sankaravadivoo G
  First published: