கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் நடிகை!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் நடிகை!

ஷில்பா ஷிரோட்கர்

அவரது சகோதரி நம்ரதா ஷிரோட்கர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மனைவி.

 • Share this:
  நடிகை ஷிரோட்கர் ஷில்பா கொரோனாவுக்கான தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலம் வேக்சின் போட்டுக் கொண்ட முதல் நடிகை என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் ஷில்பா.

  கோவிட் 19-ன் கோர பிடியில் உலகம் சிக்கி ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. இந்த தொற்று நோயால், மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் சுமார் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஒருவழியாக, கொரோனா தடுப்பூசி ஜனவரி 16-ம் தேதி முதல் இந்தியாவில் போடப்படுகிறது. இதில் முதலில் மூன்று கோடி சுகாதார ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.   
  View this post on Instagram

   

  A post shared by Shilpa Shirodkar (@shilpashirodkar73)


  இதற்கிடையில் நடிகை ஷில்பா ஷிரோட்கர் தனது கையில் ஊசி போட்டுக் கொண்ட படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்."பாதுகாப்பான தடுப்புசி! நியூ நார்மல் 2021-க்கு வருகிறேன். நன்றி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்" என்றும் அந்த படத்துடன் குறிப்பிட்டுள்ளார். 1991 ஆம் ஆண்டில் வெளியான 'ஹம்' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சனுடன் நடித்திருந்த ஷில்பா, துபாயில் தனது கணவர் அபரேஷ் ரஞ்சித் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். அவரது சகோதரி நம்ரதா ஷிரோட்கர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மனைவி.

  தொண்ணூறுகளில் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்த ஷில்பா ஷிரோட்கர், ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல் அளித்த ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி போட்டிருக்கிறார். டிசம்பர் கடைசி வாரத்திலிருந்து அந்நாட்டு குடிமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: