முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு ஆபாச படம் மூலம் ஒரு நாளைக்கு ரூ.6-8 லட்சம் வருமானம் - வெளியான பகீர் தகவல்!

ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு ஆபாச படம் மூலம் ஒரு நாளைக்கு ரூ.6-8 லட்சம் வருமானம் - வெளியான பகீர் தகவல்!

Shilpa shetty - raj kundra

Shilpa shetty - raj kundra

ஆபாச படங்களை மொபைல் செயலியில் ரிலீஸ் செய்ததன் மூலம் ஆரம்ப நாட்களில் ஒரு நாளைக்கு 2 முதல் 3 லட்சம் வரை வருமானம் கிடைத்ததாகவும், அதன் பின்னர் ஒரு நாளைக்கு 6 முதல் 8 லட்சம் வரையிலும் ராஜ் குந்த்ரா சம்பாதித்ததாகவும் தெரியவந்திருக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா இளம் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அவர்களை பயன்படுத்தி ஆபாச படம் உருவாக்கி அதனை மொபைல் ஆப்-ல் வெளியிட்டதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தொழிலதிபரான ராஜ் குந்த்ரா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒரு பங்குதாரர் ஆகவும் இருக்கிறார். இவர் கட்டுமான நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். மேலும் ராஜ் குந்த்ரா ‘JL Media’ என்ற பெயரில் மொபைல் அப்ளிகேஷனை நிறுவி அதில் வெப் சீரீஸ்களை தயாரித்து வழங்கி வருகிறார்.

ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ரா சிக்கியது எப்படி?

கடந்த பிப்ரவரி மாதம் மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு, ஆபாச படங்களை உருவாக்கி அதனை மொபைல் அப்ளிகேஷனில் பார்க்கும்படி வெளியிடுகிறார்கள் என புகார் கிடைத்திருக்கிறது. அதனை அடிப்படையாக கொண்டு தீவிரமாக விசாரித்த போது இந்த ஆபாச பட உருவாக்கத்திலும், அதனை மொபைல் அப்ளிகேஷனில் வெளியிடுவதிலும் முக்கிய நபராக ராஜ் குந்த்ரா இருப்பது தெரிய வந்தது. அதனையடுத்து அவர் மீதான குற்றச்சாட்டுக்கு நம்பகமான ஆதாரங்களை திரட்டி வந்த போலீசார் தற்போது அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்..

Also Read:  ₹96,000 விலை கொண்ட ஏசியை வெறும் ₹5,800க்கு விற்ற அமேசான்... ஏமாந்து போன வாடிக்கையாளர்கள்!

இதனிடையே ராஜ் குந்த்ராவை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் காவல்துறையினருக்கு கிடைத்திருக்கின்றன.

ஆபாச படங்கள் தயாரிப்பில் கடந்த 18 மாதங்களாக ராஜ் குந்த்ரா ஈடுபட்டு வந்துள்ளார். லாக் டவுன் நேரத்தில் அவருடைய தொழில் சூடு பிடித்திருக்கிறது. ஆபாச படங்களை மொபைல் செயலியில் ரிலீஸ் செய்ததன் மூலம் ஆரம்ப நாட்களில் ஒரு நாளைக்கு 2 முதல் 3 லட்சம் வரை வருமானம் கிடைத்ததாகவும், அதன் பின்னர் ஒரு நாளைக்கு 6 முதல் 8 லட்சம் வரையிலும் ராஜ் குந்த்ரா சம்பாதித்ததாகவும் தெரியவந்திருக்கிறது.

Also Read:   திராட்சைகளின் ரோல்ஸ் ராய்ஸ்.. உலகின் மிக விலையுயர்ந்த சிவப்பு திராட்சை: ஒரு பழத்தின் விலை ரூ.35,000!

மேலும் ஆபாச படங்களை இது போன்று செயலியில் இந்தியாவிலிருந்து அப்லோட் செய்ய முடியாது என்பதால் லண்டனில் இருக்கும் அவருடைய மைத்துனர் பிரதீப் பக்‌ஷி என்பவரின் கென்ரின் நிறுவனம் மூலமாக வீடியோக்களை அப்லோட் செய்திருக்கின்றனர். இந்தியாவிலிருந்து வீ- ட்ரான்ஸ்ஃபர் வாயிலாக லண்டனுக்கு இத்தகைய வீடீயோக்களை அனுப்பியுள்ளனர். Hotshot என்ற செயலியில் பணம் செலுத்தி இந்த வீடியோக்களை பார்க்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இந்த செயலி ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரிலும் கிடைத்திருக்கிறது.

மும்பை காவல்துறையினர் தற்போது ஆபாச வீடியோக்கள், வாட்ஸ் அப் சாட்கள், பணப் பறிமாற்ற ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். அதே நேரத்தில் எவ்வளவு பணத்தை ராஜ் குந்த்ரா இந்த வகையில் சம்பாதித்திருக்கிறார் என்ற முழு விவரத்தை இன்னும் போலீசார் வெளியிடவில்லை. இருப்பினும் ராஜ் குந்த்ராவின் பல்வேறு வங்கி கணக்கில் உள்ள 7.5 கோடி ரூபாய் பணத்தை போலீசார் முடக்கி வைத்துள்ளனர்.

Also Read:   கீர்த்தி சுரேஷ் முதல் அனுஷ்கா வரை: தென்னிந்திய டாப் 10 நடிகைகளின் உண்மையான வயது!

ராஜ் குந்த்ரா தங்களை மிரட்டி நிர்வாணப்படுத்தி ஆபாச படங்களில் நடிக்க வைத்ததாக 9 பெண்கள் புகார் அளித்திருப்பதால் அவர் மீது ஏமாற்றுதல் மோசமாக நடந்து கொள்ளுதல், ஆபாச வீடியோக்கள் தயாரித்து பொதுவெளியில் வெளியிடுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஷில்பா ஷெட்டி-ராஜ் குந்த்ரா தம்பதிகள் 2009-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு வையான் ராஜ் என்ற மகனும், ஷமிஷா என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actress Shilpa Shetty, Porn websites, Sex