Sharanya Turadi : 'பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி' ஆதரவற்றோருக்கு உதவி வரும் நடிகை சரண்யா சுந்தர்ராஜ்!

நடிகை சரண்யா

நாளுக்கு நாள் உதவி கேட்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்த சரண்யா, அனைவருக்கும் உதவ முயற்சிப்பதாக கூறியுள்ளார்.

  • Share this:
    தமிழில் முன்னணி செய்தி தொலைக்காட்சியாக இருக்கும் புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் சரண்யா சுந்தர்ராஜ். அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த போது 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது',' ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' ஆகிய திரைப்படங்களில் நடித்த அவர், பின்னர் நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றினார். தொடர்ந்து சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்ததால் செய்தித்துறையில் இருந்து விலகி முழுநேர நடிகையாக மாறினார்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பான நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து ஆகிய தொடர்களிலும், ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலிலும் நடித்தார். வீட்டில் வயதான பெற்றோர் இருப்பதால், நடிப்புக்கு கொஞ்சம் இடைவெளி விட்டுவிட்டு, தற்போது வீட்டில் இருந்து அவர்களை கவனித்து வருகிறார்.

    புதிதாக புத்தகம் ஒன்றை எழுதி வரும் அவர், தற்போது ஆதரவற்றோர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருபவர்கள் உள்ளிட்டோருக்கு உணவுகளை தானமாக வழங்கி வருகிறார். இது குறித்து அவர் பேசும்போது," கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால், வீட்டில் இருக்கும் பெற்றோரை கவனிப்பதற்காக நடிப்பில் இருந்து கொஞ்சம் காலம் விலகியிருக்க முடிவெடுத்துள்ளேன்.

    ALSO READ |  ஊசியில்லாமல் தடுப்பூசி போட்டுக் கொண்டாரா நயன்தாரா - நெட்டிசன்கள் கேள்வி

    புதிய புத்தகம் ஒன்றை எழுதி வருவதால், என்னுடைய கவனமெல்லாம் தற்போது அதில் உள்ளது. கடந்த ஆண்டு ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்தேன். ஆனால், இந்த ஆண்டு ஊரடங்கு மற்றும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்து வருகிறேன்" எனக் கூறினார்.

    "ஊரங்கு காலத்தில் சாலையோரத்தில் இருப்பவர்களுக்கு உணவு கிடைக்காது என நினைப்போம். உண்மையில், வயதான முதியவர்கள், குடும்பம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், பாலூட்டும் இளம் தாய்மார்கள் உள்ளிட்டோருக்கும் உணவு தேவை இருக்கிறது.

    ALSO READ | முதல் படத்தில் குட்டி பையனாக யுவன் - லைக்ஸை குவிக்கும் படம்!

    அவர்களால் சமைக்க முடியாது. அண்மையில் பாலூட்டும் தாய்மார் ஒருவர் இன்ஸ்டாகிராமில் உணவு வேண்டும், உதவ முடியுமா? என மெசேஜ் அனுப்பியிருந்தார். அவர்கள் குடும்பம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அப்போது, தான் Shore Women Society என்ற பக்கத்தை உருவாக்கினேன்" என தன்னுடைய கொரோனா கால பணிகளை விவரித்தார்.

    உதவி தேவை குறித்து தன்னுடைய பக்கத்தில் மெசேஜ் செய்பவர்களுக்கு, வயதான முதியவர்களுக்கு, கொரோனா நோயாளிகளுக்கு தேவையான உணவுகளை உடனடியாக அனுப்பி வருவதாகவும், தண்டையார்பேட்டையில் இருக்கும் மீனவ பெண்கள் சிலரும் தனக்கு உதவியாக இருப்பதாக சரண்யா கூறியுள்ளார்.

    ALSO READ | நடிப்புக்கு முழுக்குப் போடுகிறாரா காஜல் அகர்வால்?

    நாளுக்கு நாள் உதவி கேட்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்த சரண்யா, அனைவருக்கும் உதவ முயற்சிப்பதாக கூறியுள்ளார். அரிசி சாதம், காய்கறிகள், முட்டை மற்றும் கார்ன் ஆகியவை தயாரிப்பதாகவும், தரத்தில் துளியும் சமரசம் செய்துகொள்வதில்லை என விளக்கினார்.

    வந்திருக்கும் கோரிக்கைகளின் அடிப்படையில் உணவுப் பொருட்களை வாங்கி சமைப்பதாக தெரிவித்த அவர், பெற்றோர், கணவரும் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறினார். மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கு தேவையான கவுன்சிலிங் ஏற்பாட்டையும் செய்து கொடுக்கிறார்.

    ALSO READ | மீண்டும் பழைய அழகை பெற்ற நடிகை ரைசா வில்சன்- வைரலாகும் புகைப்படம்

    " சிலர் பண உதவி செய்கின்றனர். அவர்கள் அளிக்கும் பணமும் உணவுப் பொருட்களை வாங்குவதற்கு உதவியாக இருக்கிறது. நானே சில வீடுகளுக்கு சென்று உணவுப் பொட்டலங்களை வீட்டின் நுழைவு வாயில் முன்பு வைத்துவிட்டு வருகிறேன். சாலையில் பயணிக்கும்போது பல்வேறு முறை காவல்துறையினர் என்னை தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். இருப்பினும், பிறருக்கு உதவுவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என தன்னுடைய அனுபவத்தை முழுமையாக பகிர்ந்துகொண்டார் சரண்யா.
    Published by:Sankaravadivoo G
    First published: