மாஸ்டர் ட்ரைலர் எப்ப தான் விடுவீங்க ?வடிவேல் காமெடியை பதிவிட்டு பதில் சொன்ன ஷாந்தனு..

மாஸ்டர் ட்ரைலர் எப்ப தான் விடுவீங்க ?வடிவேல் காமெடியை பதிவிட்டு பதில் சொன்ன ஷாந்தனு..

ஷாந்தனு,விஜய்

மாஸ்டர் ட்ரைலர் குறித்து கேட்ட ரசிகரிடம் வடிவேல் காமெடியை பதிவிட்டு நடிகர் சாந்தனு பதில் கூறியுள்ளார்.

 • Share this:
  பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களை மிகுந்த எதிர்ப்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருப்பதால் படம் நிச்சயமாக வெற்றிப் பெறும் என படம் வெளியாவதற்கு முன்னரே எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

  மேலும் சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி, ஆண்ட்ரியா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. படத்தின் டீசர் யூடியூப்பில் 5 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த நிலையில், தற்போது படத்தின் ட்ரைலரை எப்போது தான் வெளிவிடுவீங்க என ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

   


  இந்நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷாந்தனுவிடம் ரசிகர் ஒருவர் ட்ரைலர் எப்போது வெளிவரும் என கேள்வி எழுப்பி வந்துள்ளார். அதற்கு ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் வரும் வடிவேல் காமெடியை பதிவிட்டு, ‘இதுக்குமேல என்னால சமாளிக்க முடியல. அந்த ட்ரைலர் அப்டேட் நீங்களாச்சும் சொல்லுங்க ப்ரோ’எனக் கூறியுள்ளார். இந்த வாரத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Tamilmalar Natarajan
  First published: