வசந்தபாலன் படத்தில் நடிக்கும் சாந்தா தனஞ்செயன்...!

இயக்குநர் வசந்தபாலன்

வசந்தபாலனுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவம் என சாந்தா கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இயக்குனர் வசந்தபாலனின் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் சாந்தா தனஞ்செயன்.

எலைட் கிரான்ட்மா வேடம் என்றால் மணிரத்னம், ராஜீவ் மேனன் போன்றவர்கள் நாடுவது சாந்தா தனஞ்செயனை. அவர் கடைசியாக நடித்த படம்கூட, ராஜீவ் மேனனின் சர்வம் தாளமயம் படமே. வசந்தபாலனின் புதிய படத்தில் முக்கியமான வேடத்தில் இவர் நடித்துள்ளார்.

இயக்குனர் வசந்தபாலன் ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் ஜெயில் திரைப்படத்தை முடித்துவிட்டு, அர்ஜுன் தாஸ் நடிப்பில் புதிய படம் ஒன்றை தொடங்கினார். படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதில் சாந்தா தனஞ்செயன் ஓய்வுபெற்ற தலைமையாசிரியையாக நடித்துள்ளார். "சின்ன வேடம். ஆனால், கிளைமாக்ஸை நோக்கி செல்கையில் என்னுடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும்" என்று சாந்தா தனது வேடம் குறித்து கூறியுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இன்னும் சில தினங்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளது.

Also read... சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் எப்போ? தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

வசந்தபாலன் சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை எடுத்துக் கொண்டார். தற்போது அவர் அதிலிருந்து முழுமையாக தேறிவருகிறார். வசந்தபாலனுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவம் என சாந்தா கூறியுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: