கண்டிப்பாக தனுஷ் உடன் பணியாற்றுவேன் - பாலிவுட் இயக்குநர்!

தனுஷ்

 • Share this:
  கண்டிப்பாக தனுஷ் உடன் பணியாற்றுவேன் என்று பாலிவுட் இயக்குநர் ஒருவர் கூறியுள்ளார்.

  வடசென்னை படத்தை அடுத்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்த படம் அசுரன். இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், கென் கருணாஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

  வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். தாணு தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்ததோடு மட்டுமின்றி ரூ.100 கோடி வசூல் செய்து வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

  இந்தப் படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் தனுஷ், அதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

  இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கின் சகோதரரும், இயக்குநருமான ஷமஸ் நவாப் சித்திக் எதிர்காலத்தில் நடிகர் தனுஷுடன் கண்டிப்பாக பணிபுரிவேன் என்று கூறியுள்ளார்.

  இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் அவர், சூப்பர் ஸ்டார் தனுஷ் நடித்த படங்களின் கலெக்‌ஷனைப் பார்த்து முடித்திருக்கிறேன். அவரது நடிப்பால் ஈர்க்கப்பட்டுள்ளேன். கண்டிப்பாக எதிர்காலத்தில் அவருடன் நல்ல கதையுடன் பணிபுரிவேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

     Also see:

  Published by:Sheik Hanifah
  First published: