மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இணைகிறாரா நடிகை ஷாலினி அஜித்?

நடிகை ஷாலினி அஜித்

நடிகர் அஜித் உடனான திருமணத்திற்குப் பிறகு 2001ல் நடிப்பிலிருந்து விலகினார், அவரது கடைசி படம் பிரசாந்த் நடித்த 'பிரியாத வரம் வேண்டும்' திரைப்படமாகும்.

  • Share this:
மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஜனவரி 6ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் ஹைதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெறுகிறது.

இதற்காக கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பார்த்திபன் உள்பட படக்குழுவினர் அனைவரும் ஹைதராபாத் சென்றுள்ளனர். இந்த படத்தின் ஒரு பகுதியாக நடிகர் ஐஸ்வர்யா ராய் பச்சன் இருப்பதை ஏற்கனவே உறுதிப்படுத்திய நிலையில் படப்பிடிப்பு செட்டில் அவருடன் சிலர் எடுத்துகொண்ட புகைப்படங்களும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் பரவியது.

இந்தநிலையில் தற்போது நடிகை ஷாலினி அஜித் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய காட்சியில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷாலினி, 'காதலுக்கு மரியாதை' படத்தில் கதாநாயகியாக அடியெடுத்து வைத்தார். இதன் பின்னர் எண்ணற்ற படங்களில் நடித்த இவர், 2000ம் ஆண்டில் மாதவன் நடித்த 'அலைபாயுதே' படத்தில் மணி ரத்னத்துடன் இணைந்தார். இந்த திரைப்படம் தற்போது வரை இளைஞர்கள் மத்தியில் நிலைத்திருக்கிறது.

நடிகர் அஜித் உடனான திருமணத்திற்குப் பிறகு 2001ல் நடிப்பிலிருந்து விலகினார், அவரது கடைசி படம் பிரசாந்த் நடித்த 'பிரியாத வரம் வேண்டும்' திரைப்படமாகும்.
இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் மூலம் மீண்டும் திரைத்துறைக்கு அடியெடுத்து வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் உண்மையாக இருந்தால், நடிகை ஷாலினி இரண்டாவது கட்ட படப்பிடிப்பின் போது ஹைதராபாத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ரஹ்மான், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் ஏற்கனவே படப்பிடிப்பில் பிசியாக உள்ள நிலையில், நடிகை ஷாலினியும் இணையவுள்ள தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது

'பொன்னியின் செல்வன்' படத்திற்கு நடன இயக்குனராக பிருந்தா பணியாற்றி வருகிறார். ஷாம் கவுசல் ஆக்சன் காட்சிகளை இயக்கி வருகிறார். இந்த படத்தை மணி ரத்னம் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், எடிட்டிங் வேலைகளுக்கு ஸ்ரீகர் பிரசாத் , தோட்டா தரணி தயாரிப்பு வடிவமைப்பை கவனித்து வருகிறார். ஜெயமோகன் வசனங்களை எழுதியுள்ளார். சிவா அனந்த் படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: