ஷகிலா வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஷகிலா வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஷகிலா பட போஸ்டர்

நடிகை ஷகிலா வாழ்க்கை வரலாற்று திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது.

  • Share this:
1990-களில் அடல்ட்ஸ் ஒன்லி படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ஷகிலா. அப்போது வெளியான முன்னணி நடிகர்களின் படங்களுக்கே சவாலாக அமைந்த ஷகிலாவின் திரைப்படங்கள் வசூலையும் குவித்தன.

அந்த காலகட்டத்தில் தனது குடும்பத்தினராலேயே புறக்கணிக்கப்பட்டது, ஷகிலாவின் படங்களை தடை செய்ய வேண்டும் என திரையுலகினரே போராடியது உள்ளிட்ட அவரது வாழ்வின் அனைத்து பக்கங்களையும் திரைப்படமாக்கியுள்ளார் கன்னட இயக்குநர் இந்திரஜித் லோகேஷ்.

ரிச்சா சத்தா, பங்கஜ் திரிபாதி, எஸ்தர் நொரான்கா, ராஜீவ் பிள்ளை, ஷீவா ரானா, கஜோல் சக் மற்றும் சந்தீப் மலானி உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்தை ஷம்மி நன்வானி, சரவண பிரசாத் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

கேரளாவைப் போல் இருக்க வேண்டும் என்பதற்காக கர்நாடகாவின் தீர்த்தஹல்லி பகுதியில் சில காட்சிகளை படமாக்கிய படக்குழு, படத்தின் பெரும்பகுதியை பெங்களூருவின் இன்னோவேட்டிவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்கியுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களில் டைட்டில் பாடலை பாலிவுட் இசையமைப்பாளர் மீட் ப்ரோஸ் இசையமைத்துள்ளார். மற்ற இரண்டு பாடல்களை இசையமைப்பாளர் வீர் சமர்த் இசையமைத்துள்ளார்.

மேலும் படிக்க: மாரடைப்பு சிகிச்சைக்காக உதவி கோரிய நகைச்சுவை நடிகர் பெஞ்சமின்நேரடியாக இந்தி மொழியில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியாகவுள்ளது. மலையாள பதிப்பு கேரள மாநிலத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. சென்சாரில் ‘A' சான்றிதழ் பெற்றிருக்கும் இத்திரைப்படம் தணிக்கைக் குழுவினரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
Published by:Sheik Hanifah
First published: