• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பெண்களை இம்ப்ரஸ் செய்வது எப்படி? ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த ஷாருக்கான்!

பெண்களை இம்ப்ரஸ் செய்வது எப்படி? ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த ஷாருக்கான்!

ஷாரூக்கான்

ஷாரூக்கான்

ஏறக்குறைய 30 வருடங்களுக்கு மேலாக பாலிவுட்டில் கோலோச்சி உள்ள ஷாருக், எப்போதும் மனதில் படத்தை மிக தெளிவாக பேச கூடியவர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சமீபத்தில் ‘AskSRK’ என்ற தலைப்பில் "என்னிடம் எதையும் கேளுங்கள்"(Ask Me Anything) என்ற பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து நடிகர் ஷாருக்கான் வழக்கம் போல் நெட்டிசன்களிடமிருந்து ஏராளமான பர்சனல் கேள்விகள் மற்றும் கோரிக்கைகளை பெற்று வருகிறார். ஏறக்குறைய 30 வருடங்களுக்கு மேலாக பாலிவுட்டில் கோலோச்சி உள்ள ஷாருக், எப்போதும் மனதில் படத்தை மிக தெளிவாக பேச கூடியவர். நேர்காணல்கள் அல்லது விருது வழங்கும் நிகழ்ச்சிள் என பாரபட்சமின்றி மனதில் படத்தை தயக்கமின்றி பேசி வருகிறார். இவரது ஒன் லைனர் நகைச்சுவைகள் பொழுதுபோக்கு துறையில் இருக்கும் த்திசாலித்தனமான கலைஞர்களில் ஒருவராக நடிகர் ஷாருக்கை தனித்து நிற்க செய்கிறது.

என்னிடம் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள் என ஷாருக்கானின் ட்வீட்டை பார்த்து அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இதனை அடுத்து ரசிகர்கள் ஷாருக்கானின் அடுத்த திரட்டைப்படம் என்ன, அவரது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் போட்டிகளுக்கு எவ்வாறு தயாராகி வருகிறது உள்ளிட்ட பல சூடான விவாதங்களுக்கு இடையே ரசிகர் ஒருவர் தனது காதல் வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் பெண்களை கவர்வது எப்படி என்பதற்கு சில ஆலோசனைகளை கூறுமாறு ஷாருக்கானிடம் கேட்டுள்ளார்.



@ALBELLA_SRKMSD என்ற அந்த ட்விட்டர் பயனர் இளம்பெண்களின் மனதை கவர்ந்து எப்படி வெல்வது என்பது குறித்த சில டிப்ஸ்களை பகிர்ந்து கொள்ளுமாறு ஷாருக்கிடம் கேட்டார். இதை அந்த யூசர் இந்தியில் எழுதினார், “லட்கி படனே கே லியே எக் டூ டிப்ஸ் டூ” (பெண்களை பிக்கப் செய்வது குறித்த சில உதவிக்குறிப்புகளை கொடுங்கள்) என்று பதிவிட்டார். ரசிகரின் இந்த கேள்விக்கு மிகவும் அழகாக பொறுப்புடன் பதில் அளித்த பாலிவுட் பாட்சா & காதல் மன்னன் என்றழைக்கப்படும் ஷாருக், பிக்கப் என்று பொருள்படும் வார்த்தையான Patana என்ற வார்த்தை பயன்படுத்துவதை தவிர்த்து, மென்மை மற்றும் மரியாதைக்குரிய வார்த்தைகளை பெண்களுக்கு பயன்படுத்துங்கள் என்று ரசிகருக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

ரசிகரின் கேள்வியை முதிர்ச்சியுடன் கையாளும் விதத்தில் நடிகரின் தனி வழியை கண்டு அவரது ரசிகர்கள் ஈர்க்கப்பட்டதால் கானின் பதிலுக்கு நிறைய லைக்குகள் கிடைத்தன.

Also read... Karnan: தனுஷின் ‘கர்ணன்’ படத்தை வாங்கிய மோகன்லால்!

ஷாருக்கின் பதில் மூலம் பெண்களை மதிக்கும் வழியை கேள்விகேட்ட ரசிகரும் புரிந்து கொண்டார். ஷாருக் கடைசியாக 2018-ல் அனுஷ்கா சர்மா மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோருடன் இணைந்து ஜீரோ திரைப்படத்தில் நடித்தார். இந்நிலையில் ஷாருக் சீக்ரட் ஏஜெண்டாக நடித்துள்ள Pathan என்ற திரைப்படம் விரைவில் ரீலீஸ் ஆக உள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: