• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஜாமியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான பாலிவுட் ‘கான்’கள் மெளனம் காப்பது ஏன்?

ஜாமியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான பாலிவுட் ‘கான்’கள் மெளனம் காப்பது ஏன்?

ஷாருக்கான் - ஆமிர்கான்

ஷாருக்கான் - ஆமிர்கான்

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஜாமியா பல்கலைக்கழகத் தாக்குதல் குறித்து பாலிவுட் சூப்பர்ஸ்டார்களான ‘கான்’கள் இன்னும் மெளனம் காப்பது ஏன் என அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    பாலிவுட் சூப்பர்ஸ்டார்களாக அறியப்படும் ஷாருக்கான், ஆமிர்கான் ஆகியோர் டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் ஆவர். டெல்லியில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் நடத்தியத் தாக்குதலில் பெருமளவு பாதிக்கப்பட்டவர்களாக ஜாமியா மாணவர்கள் உள்ளனர்.



    நாடு முழுவதும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய டெல்லி போலீஸாருக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ஆனால், பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் யாரும் இதுகுறித்து ஒரு வரி கூட பேசாது சக பாலிவுட் உலகத்தாரையே எரிச்சல் ஊட்டியுள்ளது.



    டாப் நட்சத்திரங்களை இதர பாலிவுட் நடிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஜாமியா பல்கலைக்கழகத்திலிருந்து படித்து உயர் பதவிகளில் இருப்போர் ஷாருக்கான் மற்றும் ஆமிர்கானுக்கு எதிராக விமர்சித்து வருகின்றனர். #shameonBollywood  என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருவதும் குறிப்பிடத்தக்கது.



    மேலும் பார்க்க: இந்தியக் குடியுரிமை சட்ட மசோதா- மத்திய அரசை எதிர்க்கும் 3 மாநிலங்கள்... சட்டம் என்ன சொல்கிறது?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: