குழந்தைகள் பாலியல் பலாத்காரம் : செல்போன்கள் தான் காரணம் - விவேக்

news18
Updated: April 17, 2018, 11:22 AM IST
குழந்தைகள் பாலியல் பலாத்காரம் : செல்போன்கள் தான் காரணம் - விவேக்
விவேக் - நடிகர்
news18
Updated: April 17, 2018, 11:22 AM IST
குழந்தைகள் பாலியல் பலாத்காரம் தொடர்கதையாவதற்கு இணையத்தில் கிடைக்கும் ஆபாசங்களும் , செல்போன்களும் தான் காரணம் என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

அண்மையில் காஷ்மீர் மாநிலம், கத்துவாவில் 8 வயது சிறுமி  வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார். இதேபோல், உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் நகரில் 16 வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த இரு சம்பவங்களும் நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அதிர்வலைகள் அடங்கும் முன்பே குஜராத் மாநிலம் சூரத் அருகே பெஸ்டான் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 9 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால் தான் குற்றம் புரிவோருக்கு பயம் வரும் என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் விவேக்,"குழந்தை பலாத்காரம் தொடர்கதையா? பெண்மையைப் போற்றும் இந்தியாவுக்கு அது நன்றன்று. உடனே மரண தண்டனை வழங்கப் பட்டால் தான் குற்றம் புரிவோருக்கு பயம் வரும். இணையத்தில் சிதறிக்கிடக்கும் ஆபாசங்கள்,அதை எளிதில் பார்க்க உதவும் செல்போன்கள் இவையும் இக்குற்றங்களுக்கு காரணம்.பெற்றோர் கவனிக்க! என தெரிவித்துள்ளார்.

குழந்தை பலாத்காரம் தொடர்கதையா? பெண்மையைப் போற்றும் இந்தியாவுக்கு அது நன்றன்று.உடனே மரண தண்டனை வழங்கப் பட்டால் தான் குற்றம் புரிவோருக்கு பயம் வரும்.இணையத்தில் சிதறிக்கிடக்கும் ஆபாசங்கள்,அதை எளிதில் பார்க்க உதவும் செல்போன்கள் இவையும் இக்குற்றங்களுக்கு காரணம்.பெற்றோர் கவனிக்க!

— Vivekh actor (@Actor_Vivek) April 16, 2018
First published: April 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்