ஊரடங்கால் தடைபட்ட வருமானம்: ஒரு வேளை உணவுக்கு வழியின்றி தவிக்கும் சின்னத்திரை நகைச்சுவை நடிகர்..
சின்னத்திரையில் மக்களை மகிழ்வித்த நடிகர் ஒருவர் தனது வாழ்வில் தாய், தந்தை, சகோதரரை சிரிக்க வைக்க முடியாமல் வறுமையால் வாடி வருகிறார்.

நகைச்சுவை நடிகர் பரந்தாமன்
- News18 Tamil
- Last Updated: June 19, 2020, 12:54 PM IST
ஓசூர் அருகே உள்ள சிவலிங்கபுரம் மலை கிராமத்தை சேர்ந்தவர் 27 வயதான பரந்தாமன். இவருடன் பிறந்த நால்வரில் மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மனநலம் பாதிக்கப்பட்ட தந்தை எலும்பு முறிவு ஏற்பட்ட தாய், மாற்றுத்திறனாளியான சகோதரன் சகாதேவன் ஆகியோருடன் பரந்தாமன் வசித்து வருகிறார்.
உடல் வளர்ச்சி குறைந்த இவர் சிறுவயதிலிருந்தே நாடகம், தெருக்கூத்து ஆகியவற்றில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். எம்.ஏ. சினிமா படித்துள்ள பரந்தாமன், சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் காமெடி நடிகராக நடித்து வருகிறார். ஊரடங்கால் தற்போது அந்த வருமானமும் இல்லாததால் ஒரு வேளை உணவிற்கே அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இவரது குடும்பம்.
தனது நகைச்சுவை நடிப்பால் ஊரையே சிரிக்க வைத்த இவர் தனது குடும்பத்தினரின் பசியைப் போக்கி அவர்களை சிரிக்க வைக்க முடியவில்லையே என்ற வேதனையில் உள்ளார்.
மக்களை மகிழ்விக்கும் கலைஞனின் மனதில் மகிழ்ச்சி மலர்ந்து குடும்பம் குதூகலம் பெற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.