சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் தனக்கெதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத் தாக்கல் செய்த மனு குறித்து சித்ராவின் தந்தை பதிலளிக்க
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் கைதான சித்ராவின் காதல் கணவர் ஹேம்நாத் 60 நாட்கள் சிறையில் இருந்து பின்னர் ஜாமினில் வெளி வந்தார். இவர் சித்ராவின் மரணத்தில் அரசியல் புள்ளிகள், பிரபலம், பணம் படைத்தவர்கள் என பலருக்கு தொடர்பு இருப்பதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேம்நாத் மனு தாக்கல் செய்திருந்தார்.
Also Read : பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பு இடத்தில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம்.. உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை விசாரணைக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம் மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக சித்ராவின் தந்தை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.