Actress Shamili: இன்ஸ்டாவில் இளைஞரின் செயலால் ஷாக்கான பிரபல சீரியல் நடிகை

Actress Shamili: இன்ஸ்டாவில் இளைஞரின் செயலால் ஷாக்கான பிரபல சீரியல் நடிகை

நடிகை ஷாமிலி சுகுமார்

ஷாமிலி மற்றும் அவரது குடும்பத்தாரின் புகைப்படங்களை பதிவிட்டு அவதுாறாகப் பதிவிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

  • Share this:
    சின்னத்திரை நடிகை ஷாமிலி சுகுமார் தனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவதூறாக பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சைபர் குற்றப்பிரிவில் புகாரளித்துள்ளார்.

    தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் நடிகையர், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தங்கள் வீடியோக்கள், படங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல டிவி ஒன்றில் ரோஜா, தென்றல் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வரும் ஷாமிலி சுகுமாரும் இன்ஸ்டாகிராமில் தனிக் கணக்கு வைத்துள்ளார்.

    அதுதவிர தனி யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார்; அதில், லைப் ஸ்டைல் தொடர்பான தனது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இன்ஸ்டாவிலும், யூடியூபிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், சமீபத்தில் தனது இன்ஸ்டா கணக்கைப் போன்ற போலி கணக்கு ஒன்று உலவி வருவதைக் கண்டுபிடித்துள்ளார். அதில் அவருடன் ஓர் இளைஞர் நிற்பது போல பல படங்கள் வெளிவந்ததால், அவர் யார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பினர் போலி கணக்கை தொடங்கிய மர்ம நபர், அதில் ஷாமிலி மற்றும் அவரது குடும்பத்தாரின் புகைப்படங்களை பதிவிட்டு அவதுாறாகப் பதிவிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ஷாமிலி புகார் அளித்துள்ளார். அதில், தனது பெயரில் போலியாக இன்ஸ்டா கணக்கை உருவாக்கி அருவருக்கத்தக்க வகையில் கருத்துக்களை பதிவிட்டு வரும் மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். ஷாமிலியின் புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Published by:Vijay R
    First published: