• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வருங்கால கணவருடன் திருமணத்திற்கு ஷாப்பிங் செய்யும் நடிகை வைஷாலி..

வருங்கால கணவருடன் திருமணத்திற்கு ஷாப்பிங் செய்யும் நடிகை வைஷாலி..

வைஷாலி

வைஷாலி

படங்கள் மற்றும் சீரியலில் நடித்து வரும் வைஷாலி தனது வருங்கால கணவருடன் ஷாப்பிங் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

  • Share this:
விஜய் டிவியில் இப்போது ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் நடிகை வைஷாலி தனிகா நடித்து வருகிறார். அந்த தொலைக்காட்சியின் ஹிட் சீரியலாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணனின் காதலியான ஐஸ்வர்யாவாக முதலில் நடித்தார். அதன்பிறகு இவர் மாற்றப்பட்டு தீபிகா அந்த கதாப்பாத்திரத்தில் நடித்தார். தற்போது அவரும் மாற்றப்பட்டு காயத்ரி நடித்து வருகிறார். இருப்பினும் ஐஸ்வர்யாவாக முதலில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் வைஷாலி தான்.

சீரியலில் அறிமுகமாவதற்கு முன்பே நடிகர் விஷால் நடிப்பில் வெளியான 'கதகளி' படத்தில் சிறிய வேடத்தில் நடித்து பிரபலமானவர். இதனை தொடர்ந்து காதல் கசகுதய்யா, கடுகு, சர்கார், பைரவா, ரெமோ போன்ற படங்களில் பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் நம்ம வீட்டு பொண்ணு, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய தொடர்கள் மட்டுமில்லாமல் மகராசி, கோகுலத்தில் சீதை, ராஜா ராணி, மாப்பிள்ளை, லக்ஷிமி வந்தாச்சு ஆகிய சீரியல்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய வைஷாலி, பேச்சிலராக இது என்னுடைய கடைசி பிறந்தநாள் என ரசிகர்களுக்கு அதிகாரபூர்வமாக தகவல் அளித்தார். வைஷாலி, கடந்த சில வருடங்களாக சத்யதேவ் -ஐ காதலித்து வந்தார். கடந்த ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இப்போது, விரைவில் திருமண பந்தத்தில் இணைய இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அவர் எழுதியுள்ள பதிவில், "இது தான் என்னுடைய கடைசி பேச்சிலர் பிறந்த நாள் கொண்டாட்டம். அடுத்த ஆண்டு பிறந்தநாளில் திருமதி சத்யதேவ்வாக மாறிவிடுவேன்.



 




View this post on Instagram





 

A post shared by Vaishali Thaniga (@_vaishalithaniga)





also read : ஆரவ்,ஓவியா முத்தம் முதல் வனிதா விஜயக்குமார் வரை.. பிக்பாஸ் வீட்டின் டாப் சர்ச்சைகள்

என்னுடைய இந்த பிறந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றிய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் என்னை பின்தொடரும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என குறிப்பிட்டிருந்தார். மேலும் வருங்கால கணவர் சத்யதேவ்வுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வைஷாலி தனிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய காதலர் சத்யாவுடன் திருமண ஷாப்பிங் செய்யும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அவரின் திருமண வாழ்க்கைக்கும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக பிறந்தநாளின் போது ஷேர் செய்திருந்த புகைப்படத்தில், சத்ய தேவ் - நீங்கள் என் வாழ்க்கையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பவர். உங்களுடன் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை தொடங்க இருக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என வைஷாலி தெரிவித்திருந்தார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: